JAQH அமைப்பின் அதிகாரப் பூர்வமான ஒரே இணையதளம்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

செய்திகள்:

அல்-ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸிய்யா


அல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரி நாகர்கோவில்

ஓர் அறிமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை ரோட்டில் அமைந்துள்ள அல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரி ”ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்’ அமைப்பின் சார்பாக 1988 ஆம் ஆண்டு நாகர்கோவில் கல்லூரிச்சாலையில் உள்ள கலாச்சாரப்பள்ளிவாசலில் துவங்கப்பட்டது.ஐந்து ஆண்டுகள் அந்தப்பள்ளிவாசலில் கல்லூரி சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது.பின்னர் இந்த கல்லூரிக்கென சொந்த கட்டிடம் எழுப்பிய பின்னர் 1993 முதல் புதிய கட்டிடத்தில் செயல்பட துவங்கி அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இக்கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முஸ்லிம் சமுதாயத்திலிருந்து இக்கல்லூரியை நாடிவரும் அனைத்து இளைஞர்களுக்கும் இஸ்லாமிய அறிவொளி புகட்டி அவர்களை நன்னெறிப்படுத்தி ஓரிறை நம்பிக்கையும் ஒழுக்கக்கட்டுப்பாடும் உள்ளவர்களாக அவர்களை தயார்படுத்தவே இக்கல்லூரி நிறுவப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.
இந்தியாவின் தென்மாவட்டங்களில் உள்ள அரபிக்கல்லூரிகள் மத்தியில் இது தனி இடத்தைப்பெற்று எல்லா நிலைகளிலும் தனி முத்திரை பதித்து முன்னேறிய ஒரு கல்வி நிலையமாக உருவெடுத்துள்ளது.
திருக்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையிலிருந்து வழுவாத கல்வித்திட்டத்தை இக்கல்லூரி வழங்கி வருகிறது.புதிய பாடதிட்டம்,நவீன பயிற்றுவிப்பு முறை,மாறுபட்ட தேர்வுமுறை,கணிணிப்பயிற்சி என முற்றிலும் புதுமையாக செயல்பட்டு வருகிறது.

பாடதிட்டம்

ஐந்தாண்டு பாடதிட்டத்தின் கீழ் கல்வி கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இஸ்லாமிய இளநிலைப் பட்டதாரியாக(Bacherlor of Islamic Studies-B.I.S) சான்றிதழ் பெறத்தகுதியள்ளவராகிறார்.

மாணவர் தகுதி

ஐந்தாண்டு பாடதிட்டத்தின்கீழ் சேர்ந்து பயில விருப்பமுள்ளவர்கள் பள்ளிப்படிப்பில் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேறியிருப்பதுடன் குர்ஆனை சரளமாக ஓதவும் தெரிந்திருக்கவேண்டும்.
இக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்றுள்ளனர்.முறையான ஐந்தாண்டு பாட திட்டத்தின் அடிப்படையில் படித்து தேறி சான்றிதழ் பெற்றவர்கள் ஐம்பதுக்கும் மேலானவர்கள் உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும்,அயல் நாடுகளிலும் அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்கள் இஸ்லாமிய மார்;க்கத்தை குர்அன் நபிவழியின் அடிப்படையில் தெரிந்து கொள்கின்றனர்.

திருக்குர்ஆன் மனனப்பிரிவு

கல்லூரியில் புதிதாக திருக்குர்ஆன் மனப்பாடப்பிரிவு(ஹிஃப்ஸூல் குர்ஆன்)துவங்கப்பட்டுள்ளது.இதில் பயிலும் மாணவர்கள் ஹாபிழ்களாகவும் 3 ஆண்டுகளில் காரிகளாகவும் உருவாக்கப்படுகிறார்கள்.

பயிற்றுமொழி

தமிழ் ஆங்கிலமொழிகளுக்கு இணையாக முக்கியத்துவம் தரப்பட்டு அரபிமொழி இங்கு பயிற்றுவிப்பு மொழியாக ஆக்கப்பட்டுள்ளது. சுpறந்தமுறையில் அரபி மொழியைப்பேசவம் எழுதவும் மொழிபெயர்க்கவும் சிறப்புப்பயிற்சி வழங்கப்படுகிறது.

அஃப்ஸலுல் உலமா பட்டப்படிப்பு

பல்கலைக்கழக படிப்பாகிய ‘அப்ஸலுல் உலமா   B.A. டிக்கிரிக்குச்சமமான படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது.நெல்லை மனேனான்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் இக்கலூரி அங்கீகரிக்கப்பட்டு அதன் படிப்பு மையமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் இப்படிப்பபை மாணவர்கள் எழுதுகிறார்கள்.

பள்ளி,கல்லூரி மாணவர்கள் பிரிவு

பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இங்க தங்கி தங்கள் படிப்பபைதொடர்வதுடன் பகுதிநேர இஸ்லாமிய மார்;க்கக் கல்வி மற்றும் இஸ்லாமிய ஒழுக்கப்பயிற்சியும் பெறுகின்றனர்.இவர்களுக்கு சனி,ஞாயிறு மற்றம் விடுமுறை நாள்களில் தீனிய்யாத் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கணிணிப்பயிற்சி

பெருகிவரும் கணிணி தொழில் நுட்பத்திற்கேற்ப மாணவர்களுக்கு கணிணிப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக இஸ்லாமிய மென்பொருள் பயிற்சியும் தரப்படுகிறது.

நூலகம்,படிப்பகம்

மாணவர்கள் தங்கள் ஆய்வுத்திறனை வளர்த்துக்கொள்வதற்காக அரபி மற்றும் தமிழ் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அத்துடன் தினசரி,வார,மாத இதழ்கள் அடங்கிய படிப்பக வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மாணவர் விடுதி

மூன்று வேளை உணவும் உறைவிடமும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.சுகாதாரமான சுற்றுச்சூழல்,சுத்தமான குடிநீர்,மருத்துவசேவை,விளையாட்டு,உடற்பயிற்சி வசதிகள் போன்றவை மாணவர்களுக்கு சிறப்பான முறையில் செய்து தரப்பட்டுள்ளது.அத்துடன் கல்லூரி வளளாகத்துக்குள்ளேயே தொழுகைப்பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது.

பேச்சு மற்றும் எழுத்துப்பயிற்சி

மாணவர்களிடையே பேச்சுத்திறனை மேம்படுத்த வாரந்தோறும் சொற்பயிற்சி மன்றக்கூட்டங்களும் எழுத்தாற்றலை வளர்க்க கையேட்டுப்பிரதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிர்வாகம்

இக்கல்லுரி ஜம்யிய்யத்து அஹ்லில் குர்அன் வல்ஹதீஸ்(JAQH)  மாநிலத்தலைமையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரிக்கென ஒரு நிர்வாகக்குழு செயல்பட்டு வருகிறது.அதில் 13 பேர் இடம் பெறுகின்றனர்.

வேண்டுகோள்

கல்லூரிக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்துலட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவிகளாலும் நன்கொடைகளாலுமே இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.எனவே அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளைச்செய்து அல்லாஹ்வின் அருளைப்பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் உதவிகளை அனுப்பவேண்டிய முகவரி

AL JAMIATHUL FIRDOUSIYYA ARABIC COLLEGE
PARAAKAI ROAD,KOTTAR,NAGERCOIL2-
TAMILNADU.Phone:04652-241759

 

 

”"

”"

”"

”"




Leave a comment



  • அல்ஹூதா புகைப்படம்-2
  • அல்ஹூதா புகைப்படம்-1
  • பார்வையாளர் பகுதி11- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி10- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி9- JAQH மாநில மாநாடு



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


மாநில மாநாடு வீடியோ


usmankhan

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...

மேலும் பார்க்க »

mahathi

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....

மேலும் பார்க்க »

umari

படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...

மேலும் பார்க்க »

mahlari

படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...

மேலும் பார்க்க »

umerali

படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...

மேலும் பார்க்க »

ayubalifizi

படைத்தவன்யார்?
அய்யூப்அலி பைஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோநம்மைப்படைத்த...

மேலும் பார்க்க »

usman

படைத்தவனின் கருணை
உஸ்மான்ஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனின் கருணையைப்பெற...

மேலும் பார்க்க »

manbaee

படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...

மேலும் பார்க்க »

asik

படைத்தவனை நேசிக்க
ஆஷிக்ஃபிர்தவ்ஸி JAQH மாநிலமாநாட்டுவீடியோ இறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »

safi

படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »



  • Prayer Times For 6 Million Cities Worldwide
    Country:



Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

Designed and Developed by India Web Solution