JAQH அமைப்பின் அதிகாரப் பூர்வமான ஒரே இணையதளம்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

செய்திகள்:

குல்லியத்து பனாத்தில் முஸ்லிமீன்


KULLIYATHU BANATHIL MUSLIMEEN

குல்லியத்து பனாதில் முஸ்லிமீன்(முஸ்லிம் மகளிர் கல்லூரி)

(Manged by Jamiyyathu ahlil Quraan Val Hadhees)

Madarasa Islamiya 3rd Street,Pernambut,Vellore Dist.

உருது மொழியில் மூன்று ஆண்டு ஆலிமா பட்டப்படிப்பு

சிறப்பு அம்சங்கள்

பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல்.

ஒழுக்கப்பயிற்சியில் தனிக்கவனம்.

அஃப்ஸலுல் உலமா பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு.

தரமான உணவு.

பாதுகாப்பான, சுகாதாரமான வகுப்பு அறைகள், மற்றும் தங்கும் விடுதி

பேச்சாற்றல் வளர்க்க வாராந்திர சொற்பொழிவு மன்றம்.

பிற மொழிகளான தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்றவற்றிலும் சொற்பொழிவு பயிற்சி

.

பாடதிட்டம்!

மூன்று ஆண்டு ஆலிமா பட்டப்படிப்பு.இதில் அல்குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய கொள்கைகள், இஸ்லாமிய வரலாறு, அரபி இலக்கணம் போன்ற பாடங்கள் போதிக்கப்படுகிறது. மேலும் மாணவிகளுக்கு தையல் பயிற்சி, கணிணி கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.

கல்லூரியில் சேர தகுதிகள்

பத்தாம் வகுப்பு / மெட்ரிக் படித்திருக்கவேண்டும்.

குர்ஆனை தெளிவாக ஓதத்தெரிந்திருக்க வேண்டும்.

உருது நன்றாக எழுத, படிக்கத் தெரிந்திருக்கவேண்டும்

மார்க்க கல்வி கற்கும் ஆர்வம் இருக்கவேண்டும்

குறிப்பு : குர்ஆன் மற்றும் உருது எழுத படிக்கத்தெரியாத பத்தாம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு தனியாக ஓராண்டு பாடதிட்டம் உள்ளது.

கட்டண விபரம்

நுழைவுக்கட்டணம் ரூ 1000

கல்விக்கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ250

உணவுக்கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ1250

குறிப்பு : மூன்று மாத கட்டணத்தை முன்பணமாக செலுத்த வேண்டும்.

நோக்கம்

இக்கல்லூரி உருவாக்கப்பட்டதின் நோக்கம் பெண்கள் குர்ஆன், ஹதீஸை கற்று அதன் அடிப்படையில் தாமும் செயல்பட்டு மற்றபெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.மேலும் பிரச்சாரப்பணிகளில் பெண்கள் ஈடுபட்டு சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆண்களுக்கு பல இஸ்லாமியக் கல்லூரிகள் இருந்த போதிலும் பெண்களுக்கென்று ஒரு கல்லூரியும் இல்லாததால் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH)  அமைப்பு மாநிலம் முழுவதும் பல பெண்கள் இஸ்லாமிய கல்லூரிகளை உருவாக்கி உள்ளது.அவற்றில் பேர்ணாம்பட்டில் ‘குல்லியத்து பனாத்தில் முஸ்லிமீன்’ என்ற கல்லூரி உருது பேசும் மக்களுக்காக 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இக்கல்லூரி ஐந்து வருடங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்தது.அல்லாஹ்வின் உதவியால் 2007 முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

கல்லூரி இயக்கம்

கல்விஆண்டு – ஜூன் முதல் ஏப்ரல் கடைசிவரை.

வாரந்திர விடுமுறை – வெள்ளிக்கிழமை.

ரமலான் விடுமுறை – ரமலான் 20 முதல் ஷவ்வால் முதல் வாரம் வரை.

ஹஜ்ஜூபெருநாள் – விடுமுறை:ஒருவாரம் மட்டும்.

ஆண்டு விடுமுறை – மே மாதம் முழுவதும்.

வகுப்பு நேரங்கள் – காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை.

வேண்டுகோள்

மார்க்கக் கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் அவசியம் என்பதை நாம் அறிவோம்.”படைத்த உம்முடைய இரட்சகன் பெயரால் படிப்பீராக” என்ற திருக்குர்ஆனில் முதன் முதலாக அருளப்பட்ட வசனமும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிவிக்கிறது.ஒருவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருந்து இந்த இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் ஒழுக்கம் மற்றும் கல்வியைக் கற்று கொடுப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இணைந்திருப்போம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் (ரலி)அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி.

உலகில் மனிதன் அனுபவிக்கும் அனைத்திலும் சிறந்தது ஒழுக்கமுள்ள பெண்தான் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம்

இதன் மூலம் பெண்பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்து வளர்ப்பது அவசியமானது என்பதை அறிகிறோம்.குர்ஆன் ஹதீஸை கற்று அதன் அடிப்படையில் செயல்பட்டு வரக்கூடிய சந்ததியினரை சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்குவபளே ஒழுக்கமுள்ள பெண்.

இத்தகைய பெண்களை உருவாக்கவே ‘குல்லியத்து பனாத்தில் முஸ்லிமீன்’ என்ற இக்கல்லூரி உருவாக்கப்பட்டது.

எனவே தாங்களின் பெண் பிள்ளைகளை சிறப்பு மிக்க இக்கல்லூரியில் சேர்த்து இம்மை மறுமைக்கான வெற்றியைத் தேடிக் கொள்ள வேண்டுகின்றோம். அனைத்து நன்மையான காரியங்களுக்கும் தங்களின் உதவிகளையும் நாடுகிறோம்.

உங்கள் உதவிகளை அனுப்பவேண்டிய வங்கி விபரம்

Canara Bank(Pernambut Branch)

Current A/c :No: 1095201000975

Name:Kulliyathu Banathil Muslimeen

IFSC Code:CNRB0001095

KULLIYATHU BANATHIL MUSLIMEEN

Madarasa Islamiya 3rd street,

Pernambut-635810,

Vellore Dist.

Phone:04171-232714,

Cell No:9944030746,9003625050,9894505061,9976646558,9790129551

Email:kulliyath@gmail.com

                               Download Summer class application Form




Leave a comment



  • அல்ஹூதா புகைப்படம்-2
  • அல்ஹூதா புகைப்படம்-1
  • பார்வையாளர் பகுதி11- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி10- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி9- JAQH மாநில மாநாடு



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


மாநில மாநாடு வீடியோ


usmankhan

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...

மேலும் பார்க்க »

mahathi

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....

மேலும் பார்க்க »

umari

படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...

மேலும் பார்க்க »

mahlari

படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...

மேலும் பார்க்க »

umerali

படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...

மேலும் பார்க்க »

ayubalifizi

படைத்தவன்யார்?
அய்யூப்அலி பைஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோநம்மைப்படைத்த...

மேலும் பார்க்க »

usman

படைத்தவனின் கருணை
உஸ்மான்ஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனின் கருணையைப்பெற...

மேலும் பார்க்க »

manbaee

படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...

மேலும் பார்க்க »

asik

படைத்தவனை நேசிக்க
ஆஷிக்ஃபிர்தவ்ஸி JAQH மாநிலமாநாட்டுவீடியோ இறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »

safi

படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »



  • Prayer Times For 6 Million Cities Worldwide
    Country:



Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

Designed and Developed by India Web Solution