26/01/12
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ் அழைப்புக் குழு (ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் பஹ்ரைன் மண்டலம்) இஸ்லாமிய அழைப்பு மையம் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாட்கள் கல்வித் தொடர் 19-01-2012 முதல் 21-01-2012 வரை நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அல்ஜுபைல் இஸ்லாமிய மையத்திலிருந்து மவ்லவி யாசிர் ஃபிர்தவ்ஸி அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.
19-01-2012 இரவு இஷா தொழுகைக்குப் பிறகு ஹுரா பூஷக்ர் மஸ்ஜிதில் வைத்து நிகழ்ச்சி ஆரம்பமானது. அன்றைய தினம் மூன்று அடிப்படைகள் என்ற தலைப்பில் ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களான “மூன்று அடிப்படைகள்” என்ற இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் புத்தகத்தில் உள்ள செய்திகளை மையமாகக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஒரு முஸ்லிம் தன்னுடைய இறைவன் யார் என்பதையும் தன்னுடைய மார்க்கமாகிய இஸ்லாமைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் அதனைப் பற்றி அலட்சியமாக இருப்பதால் ஏற்படப் போகும் பயங்கர விளைவுகளையும் மிக உருக்கமான முறையில் விளக்கிக் காட்டியது மிகவும் சிறப்பாக இருந்தது.
20-01-2012 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஃபாரூக் மஸ்ஜிதில் வைத்து, “கல்வியின் சிறப்புகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். கல்வி குறைந்து வரும் இக்காலகட்டத்தில் மார்க்கக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தியும் அதன் மகத்துவத்தையும் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறினார்கள். கல்வியாளர்களின் சிறப்புகளைக் கூறும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டிக் கூறினார்கள்.
20-01-2012 இரவு இஷா தொழுகைக்குப் பிறகு முஸ்தஃபா பள்ளியில் வைத்து “அல்லாஹ்வை அறிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அல்லாஹ் அவனைப் பற்றி நமக்கு அவனுடைய திருவேதம் குர்ஆன் மூலமாகவும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் மூலமாகவும் எத்தகைய பண்புகள் தனக்கு இருக்கிறது என்று கூறுகிறானோ அதை அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும். அதில் மாற்றுதல், திருத்துதல், உதாரணம் கூறுதல் கூடாது. அது போல இது குறித்து அவரவர் அறிவுக்கு ஏற்ப தவறான விளக்கம் கூறுதல் கூடாது. அல்லாஹ்வின் சிஃபத்துக்களைக் குறித்து அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்ற நேர்வழி பெற்ற மக்களின் கொள்கையில் நாம் பிடிப்புடன் இருக்க வேண்டும் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கினார்கள்.
21-01-2012 இரவு மணி்க்கு அல்ஹிதாயா அழைப்பு மையத்தில் வைத்து அழைப்பாளர்களுக்கான தஸ்கியா வகுப்பு நடைபெற்றது. இதில் “அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள. அல்லாஹ் நமக்குச் செய்த அருளை எண்ணி முடியாது. ஆனால் நாம் நன்றி செய்வதோ மிக மிகக் குறைவாக உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் நமக்குச் சுட்டிக்காட்டிய அருட்கொடைகளைச் சுட்டிக் காட்டி உருக்கமாக அவர்கள் ஆற்றிய உரை உள்ளத்தை நெருடும் வகையிலும் ஈமானுக்கு வலுவூட்டும் வகையிலும் அமைந்திருந்தது.
இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி மாதம் மவ்லவி ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புடன் நிகழ்ச்சிகள் முடிவுற்றது. எல்லா நிகழ்ச்சிகளிலும் பஹ்ரைன் நாட்டில் பல பகுதிகளிலும் வசிக்கும் தமிழ் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....
படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...
படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...
படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...
படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...
படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...
Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்