அல்ஹூதா ஆர்ஃபனேஜ்
AL-HUDHA ORPHANAGE
நிர்வாகம்
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் J.A.Q.H.தமிழ்நாடு
பதிவு எண்:182/1996 அரசு அங்கீகார எண்:553/2003 dt 21-01-204
6/7, ஸலஃபி நகர் வயர்லெஸ் ரோடு ஏற்போர்ட்,திருச்சி-620007
Phone:0431-2340447,2341775,2340784
Cell:: 94431-54648,9944644583 fax: 0431-2332417
Email: alhudha@gmail.com,alhudha@yahoo.co.in
Website:www.alhudha.org
அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே…!
புகழ் அனைத்தும் அகில உலக இரட்சகன் அல்லாஹ் ஒருவனுக்கே!அவனது சாந்தியும் சமாதானமும் அவனது இறுதித்தூதர் அகில உலகத்தின் அருட்கொடை முஹம்மத்(ஸல்) அவர்கள்மீது உண்டாவதாக!
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது அல்ஹீதா ஆர்ஃபனேஜ் 410-க்கும் மேற்பட்ட அனாதை மற்றும் ஆதரவற்ற மாணவ மாணவிகளையும் கொண்டு சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக பாதுகாப்பான காற்றோட்டமான படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகள்,தரமான சைவ அசைவ உணவுகள்,தரமான சீருடைகள் மற்றும் வண்ண ஆடைகள்,சிறந்த மருத்துவப்பராமரிப்பு,அன்பான அரவணைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இங்கு அரவணைக்கப்படும் அனாதைகளுக்கு தமிழ்வழிக் கல்வி,ஆங்கில வழிக்கல்வி,கம்யூட்டர்கல்வி இவற்றுடன் மார்க்ககல்வியும் புகட்டப்படுகிறது.
அல்ஹூதா காது கேளாதோர்பள்ளி
இப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட காது கேளாத, வாய் பேச இயலாத மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், டிஜிட்டல் ஆடியோ மீட்டர் பரிசோதனை,காதுகேட்கும் கருவிகள்;(Hearing Aids) பேச,படிக்க,எழுதப்பயிற்சி,நடைமுறை சமூகஅறிவியல், தையற் பயிற்சி ஆகியன இப்பள்ளியில் வழங்கப்படுகிறது.
இஸ்லாஹியா அரபிக்கல்லூரி
B.A.. அரபி பட்டப்படிப்பிற்கு சமமான அஃப்ஸலுல் உலமா படிப்பு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாண்டு கால பாடதிட்டத்தில் மாணவ மாணவியருக்கு தனித்தனி வகுப்பறைகள் மற்றும் விடுதி வசதியுடன் கணிணி மென்பொருள்,வன்பொருள் பயிற்சி,அரபி தட்டச்சுப்பயிற்சி,தமிழ் ஆங்கிலம் அரபு மொழிகளில் சரளமாக பேச,எழுதப்பயிற்சி,திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்புகள்,பேச்சுப்பயிற்சி இவைகள் வழங்கப்படுகிறது. இக்கல்லூரியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
ஐந்தாண்டு பட்டயப்படிப்பில் சேர இயலாத மாணவியருக்காக மூன்றாண்டு மார்க்க படிப்பு ஃபாலிலா நடத்தப்படுகிறது.
அல்ஹீதா விதவைகள் இல்லம்
அல்ஹீதா நிறுவனத்தின் சார்பாக 28-02-2011 அன்று மாணவியர் விடுதி வளாகத்தில் விதவைகளுக்காக இல்லம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.இவ்வில்லத்தில் விதவைகள் மற்றும் ஏழை எளிய பெண்கள் தங்களது பிள்ளைகளேளாடு தங்கி பயன்பெற்று வருகின்றனர்.
எதிர்கால திட்டங்களும் தேவைகளும்
தரை தளத்தில் அலுவலகம்,விருந்தினர் அறை மற்றும் மீட்டிங் ஹால்,முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் இஸ்லாஹியா அரபிக்கல்லூரி மாணவர்களுக்கென வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் அமைக்க சுமார் 50,00,000(ஐம்பது இலட்சம் ரூபாய்) தேவைப்படுகிறது.
மாணவியர் விடுதி
அனாதை மற்றும் ஆதரவற்ற மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால் இம்மாணவிகளுக்காக புதிய இல்லம் கட்டுவது மிகவும் அவசியம்.இதற்காக சுமார் 75,00,000(எழுபத்தி ஐந்து இலட்சம் ரூபாய்) தேவைப்படுகிறது.
காதுகேளாதோர் பள்ளி கட்டிடம்
காதுகேளாதோர் பள்ளிக்கு கட்டிட வசதி தேவைப்படுகிறது. இத்தேவையைப்பூர்தி செய்ய சுமார் 60,00,000 (அறுபது இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
.
உயர்நிலைப்பள்ளி கட்டிடம்
தற்போது நமது பள்ளி உயர்நிலைப்பள்ளியாக உயர்ந்துள்ள நிலையில் போதுமான கட்டிட வசதி இல்லை. இதற்கான கட்டிடம் கட்ட சுமார் 50,00,000(ஐம்பது இலட்சம் ரூபாய்) தேவைப்படுகிறது.
தொழிற்பயிற்சி கூடம்(ITI& POLYTEVHNIC)
நமது மாணவ மாணவிகள் படித்து தொழில் துறையில் முன்னேற இன்ஷாஅல்லாஹ் தொழில் பயிற்சி கூடம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.இதற்காக ரூ1,00,00,000(ஒரு கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.
மருத்துவமனை
நமது இல்லத்தில் தங்கியுள்ள மாணவ மாணவியர்களின் உடல்நநலனையும் ஆரோக்கியத்தையும் கருத்தில்கொண்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க ஒரு சுகாதார மையம் மிகவும் அவசியமாககிறது.இன்ஷா அல்லாஹ் இம்மையத்தில் படுக்கை வசதிகளுடன் கூடிய பரிசோதனைக்கூடம்,எக்ஸரே,ஸ்கேன் போன்ற நவீன கருவிகளும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.இதற்கான இடமும் வாங்கப்பட்டுள்ளது.இம்மையம் மூலம் நமது மாணவ மாணவிகளுக்கும் அருகில் வாழும் ஏழை எளிய மக்களும் பயனடைவார்கள். இதற்காக ரூபாய் சுமார் இரண்டு கோடி ருபாய் தேவைப்படுகிறது.
ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகன வசதி
நமது மாணவ மாணவியர் இலவசமாகவும் அருகிலுள்ள ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்திலும் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் மாணவ மாணவிகள் அல்ஹீதா இல்லத்திலிருந்து பள்ளிக்குச்சென்றுவர சொந்தமாக ஒரு வாகன வசதியும் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ25,00,000(இருபத்தைந்து இலட்சம் ரூபாய்) தேவைப்படுகிறது.
அனைத்து வசதிகளையும் அனாதை மாணவ மாணவியருக்காக செய்து கொடுக்க நபர் ஒன்றுக்கு மாதம் தோறும் ரூ 1000 செலவாகிறது இதர செலவுகளுடன் மாதம் ஒன்றுக்கு மொத்தம் ரூ 6,00,000(ஆறு இலட்சம்) தேவைப்படுகிறது.
அன்பான வேண்டுகோள்:-
அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையாலும் தாங்களைப்போன்றவர்களின் பேராதவராலும் இந்நிறுவனங்கள் சிறப்பாக இயங்கிவருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.
தர்ம சிந்தனை உள்ள தங்களைப்போன்றவர்களின் உதவிகளைத் தவிர இல்லத்திற்கு நிரந்தர வருமானம் எதுவுமில்லை. ஆகையால் இந்நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட தாங்களும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் தாராளமாக தங்களது ஸக்காத்,ஸதகா,சந்தா ஆகிய தான தர்மங்களை பணமாகவோ,பொருளாகவோ தந்து உதவவும். அத்துடன் தாங்கள் முடிந்தால் ஒரு மாணவருக்கோ அல்லது அதற்கு மேற்பட்டட மாணவர்களுக்கோ பொறுப்பேற்று கொணடு அதற்குரிய செலவையும் அனுப்பி தந்து உதவுங்கள்.
அலலாஹ்வின் விருப்பததிற்கேற்ப இப்பணியில் தாங்களும் பங்கெடுத்துக்கொண்டு ஈருலக வெற்றி nhறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களது D.D.,M.O, Cheque ஆகியவற்றை AL-HUDHA ORPHANAGE என்ற பெயரில் மட்டும் அனுப்பவும்.
ICICI A/C :NO: 613201205878
IOB A/C :NO: 046702000000066
6/7 SALAFI NAGER,WIRELESS ROAD,AIRPORT,TRICHY-620007
தங்களது நன்கொடைகள் வருமான வரி விலக்கிற்கு உட்பட்டது.
(approved by the Inccomee Tax Dept.U/S 80G(5)
Noc No:7162E(134)/06-07-cit-II try.Dt.20-08-07
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....
படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...
படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...
படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...
படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...
படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...
Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்