கிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை!
உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதம் கிறிஸ்தவம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இரண்டும் சிலுவைக் கொள்கையில் எதிரும் புதிருமாக உள்ளது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மெய்ப்படுத்தும் வரிகள் பைபிளில் உண்டு. பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் போதனையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனையும் ஒன்றுதான். இயேசு போதித்ததை முஹம்மது நபி (ஸல்) அவர்களும் போதிக்கிறார். அப்படியெனில் எங்கு முரண்பாடு? எதில் முரண்பாடு? ஏன் முரண்பாடு? இஸ்லாம் மட்டும் தான் உண்மை மதமா? உலகில் ஒரு பெரும்பான்மைச் சமுதாயம் சிலுவைக் கொள்கையை தம் இரட்சிப்பின் வழியாக நம்பிக்கொண்டிருக்க அது பொய் என்று இறைவன் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறிவித்தாரா? அப்படியானால் அதற்கு முன்னர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த மக்களின் நிலை? மேற்கண்ட கேள்விகள் பொதுவாக கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவ மத்திலிருந்து இஸ்லாமை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் சிலரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்கள். இதனையே அடிப்படையாகக் கொண்டு ஒரு கிறிஸ்தவர் பதிவு செய்த கேள்வியும் ஆய்வு மற்றும் மூல ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான விரிவான பதிலையும் கீழே கொடுத்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பான சந்தேகங்களுக்கு இதிலிருந்து தீர்வு கிடைக்கலாம். கிறிஸ்தவர் ஒருவரின் கேள்வி: //குர்ரான் சொல்வதுபோல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு (அல்லது இறைவன்) சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை? அவர் தெரிவிக்காமல் போனதால்தானே இந்த சீஷர்கள் எல்லோரும் தவறான கருத்துகொண்டு பிரச்சாரம் செய்து கிறிஸ்த்தவம் என்றொரு மதத்தை உருவாக்கி இன்று உலகில் முதல் பெரிய மதமாக நிற்கிறது. இங்கு கிறிஸ்த்தவம் உருவாக காரணம் யார்? இயேசுவின் சீடர்களா அல்லது இயேசுவை பின்பற்றிய சீடர்களுக்கு கூட உண்மையை சொல்லாமல் அவரை எடுத்துக்கொண்ட இறைவனின் பொறுப்பற்ற செயலா?// விளக்கம்: கிறிஸ்தவம் என்ற மதத்தை மனிதர்கள் உருவாக்க இறைவன் காரணமானவனா? என்பதை ஆராயும் முன் இறைவனைப் பற்றியும் மதங்களைப் பற்றியும் ஓர் அடிப்படையை நாம் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். பசியும் தாகமும், துன்பமும் வேதனையும் உடையவனாக, அழுபவனாக, அபயம் தேடுபவனாக, முன்கோபக்காரனாக, மனிதர்களிடம் மல்லுக்கு நிற்பவனாக, தன் அடிமையைக் காணாமல் தேடி அலைபவனாக, தான் செய்த காரியத்தைக் குறித்து வருத்தம் கொள்பவனாக இப்படி ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படக் கூடிய எல்லா பலவீனங்களையும் கொண்டவனாக கிறிஸ்தவம் இறைவனை நமக்கு அறிமுகம் செய்கின்றது! கேள்வி கேட்ட அந்த நண்பர் ஒருவேளை கடவுளைப் பற்றிய இத்தகைய தவறான மதிப்பீடுகளின் மேல் நின்று கொண்டு ”இறைவனின் பொறுப்பற்ற செயல்” என்ற முறையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் போலும்! எனவே இறைவனின் உயரிய பண்புகள் எத்தகையது என்பதை முதலில் அவர் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் இறைவனின் உயரிய பண்புகள்! அல்லாஹ் என்பது சர்வ வல்லமை மிக்க இறைவனைக் குறிக்கும் தன்னிகரற்ற ஓர் அரபுச் சொல். அல்லாஹ், நுண்ணறிவும் பரிபூரண ஞானமும் மிக்கவன்! அவனை யாரும் மிகைத்து விட முடியாது! எல்லாப் பொருட்களும் அவனது ஆற்றலுக்குட்பட்டது! நமது சிந்தனையும் ஆற்றலும் அல்லாஹ் வழங்கியதாகும்! நமது அறிவு சொற்பமானது! வரம்புகளுக்கு உட்பட்டது! அல்லாஹ்வுடைய ஆற்றலையும் அவனது நாட்டத்தையும் செயல்பாடுகளையும் குறித்து மனிதனால் கேள்வி எழுப்ப இயலாது! இறைவன் ஏன் அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான் என்று கேள்வி எழுப்புவது அறிவுடைமை ஆகாது. மாறாக ஏன் இவ்வாறெல்லாம் நிகழ்கிறது? என்பதை சிந்தித்து இறைவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்வதே அறிவுடைமை. ஏன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கிறது? ஏன் சிலரை மட்டும் கடுமையான நோய் தாக்குகிறது? ஏன் சிலர் ஊனமாகப் பிறக்கின்றனர்? ஏன் இயற்கைச் சீற்றங்களால் பேரழிவு ஏற்படுகிறது? இவை எல்லாம் அந்த வல்லமை மிக்க இறைவனின் ஆற்றலையும் மனிதனது இயலாமையையும் வெளிப்படுத்துகிறது. ஏழைக்கு அவனது ஏழ்மையும் நோயாளிக்கு அவனது நோயும் ஊனமுற்றோனுக்கு அவனது ஊனமும் சோதனைகளாகும். அது போன்றே சிலரைச் செல்வந்தர்களாகவும், உடல் நலம், உடல் பலம் மிக்கவர்களாகவும் ஆக்கி அவர்களையும் சோதிக்கிறான். இறைவனின் இந்த விதியைப் பொருந்தி கொண்டு அவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களே நல்லடியார்கள். இவ்வுலகத்தின் நியதியை இவ்வாறு இறைவன் ஆக்கியுள்ளான். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, மனிதனுக்கேற்ற நேர்வழியை அல்லாஹ் தெளிவு படுத்திவிட்டான். அதைத் தேர்ந்தெடுக்க அல்லது நிராகரிக்க உள்ள சுதந்திரத்தையும் மனிதனுக்கு வழங்கியுள்ளான். அத்துடன் யார் நிராகரிக்கின்றார்களோ அத்தகையோருக்கு கடுமையான தண்டனையைக் குறித்தும் எச்சரிக்கிறான். “இன்னும் நீர் கூறுவீராக: இந்த சத்திய(வேத)ம் உங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதாகும். எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும் எவர் நாடுகிறாரோ அவர் நிராகரிக்கட்டும்! நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நரகத்தை நாம் தயார் செய்து வைத்துள்ளோம் அதனுடைய சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே அவர்கள் முறையீடு நிறைவேற்றப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும் “(18 அல் கஹ்ஃபு – 29) அல்லாஹ் நாடியிருந்தால் மக்கள் அனைவரையும் ஒரே கொள்கையைச் சேர்ந்தவர்களா ஆக்கிவிடலாமே? என்ற கேள்வியும் அடிப்படையற்றதாகும். இதுவும் அல்லாஹ்வின் வல்லமையை நோக்கி பலவீனமான மனித சிந்தனையின் கேள்வியாகும். இதற்கு அல்லாஹ்வே விடையளித்து விட்டான். “அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான், எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களை அவன் சோதிப்பதற்காக (இவ்வாறு) செய்திருக்கிறான்“ (5 அல் மாயிதா: 48) “அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் எனினும் அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேற்றுமை கொண்டார்கள்“ (2 அல் பகறா 253) “உம்முடைய இறைவன் நாடினால் மனிதர்களை ஒரே சமுதாயத்தவராய் அவன் ஆக்கியிருப்பான் (அவன் அப்படி நாடாமையினால்) அவர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்களாகவே இருந்து வருவார்கள்” (11 ஹூது 118) கருத்து வேறுபடுவது மனிதனின் இயல்பு. இந்த இயல்பிலிருந்தே நல்லவர்களையும் தீயவர்களையும் சோதித்து நல்லவர்களுக்கு நற்கூலியும் தீயவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது என்பது இறைவன் ஏற்புடுத்திய விதி என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்கு விளக்குகின்றன. இந்நிலையிலேயே இறைவழியிலிருந்து பிறழ்ந்து உருவான மனித மதங்களைக் குறித்தும் நாம் ஆராய வேண்டும். மதங்களும் மனிதர்களும் மனித சமூகத்தின் தொடக்க கால கட்டத்தில் ஒரே இறைவனை மட்டுமே மக்கள் வணங்கி வழிபட்டு வந்தனர், பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபட்டனர் என்பது குர்ஆன் கூறும் செய்தியாகும். (2:213) நூஹ் நபி (நோவா தீர்க்கதரிசி) அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் மக்கள் வணங்கி வந்த வத்து, சுவாஉ, யஃகூஃத், யஊக், நஸ்ரு ஆகிய ஐந்து சிலைகளும் முன்னர் வாழ்ந்த நல்லடியார்களின் நினைவுச்சின்னங்களாக எழுப்பப்பட்டவை! அவர்களின் பின்தோன்றல்களால் வணக்கத்துக்குரிய சிலைகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன! என்ற ஆதாரமும் ஏக இறைவழிபாட்டிலிருந்து பிறழ்ந்து மதங்கள் பரிணமித்ததின் அடிப்படை வரலாற்றை எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு இறைதூதர்களுக்குப் பின்னரும் அந்த இறைதூதர்களைப் பின்பற்றியவர்களின் பின்தோன்றல்களிலிருந்தே வழிகேடு உருவாகிறது என்ற அடிப்படைதான் பிற்காலத்திலும் இறைதூதர்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியது. இறைவனால் வழங்கப்பட்ட இறைநூல்களில் புரோகிதர்கள் நடத்திய கையூடல்களும் இதில் அடங்கும். முந்தைய வேதநூல்கள் ஏன் பாதுகாக்கப் படவில்லை? என்ற கிறிஸ்தவர்களின் கேள்விக்கும் இதில் பதில் உள்ளன. முந்தைய வேதநூல்களுக்கு பாதுகாக்கும் உத்தரவாத்ததை இறைவன் வழங்கவில்லை. இறுதித் தூதர் வாயிலாக அருளப்பட்ட திருக்குர்ஆன் முந்தைய வேதங்களைப் பாதுகாப்பதாகவும் முந்தைய வேதங்களின் செய்திகளை உண்மைப் படுத்துவதாகவும் இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நடைமுறைச் சான்று பைபிளும் அதில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ கோட்பாடுகளும்! கிறிஸ்தவம் யாரால் உருவாக்கப்பட்டது? கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற பெயருடன் தொடர்பு படுத்தப்பட்ட ஒரு மதம்! இயேசுவோ அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளோ இப்படி ஒரு மதத்தைப் போதித்ததாக பைபிள் கூறவில்லை. மாறாக அவர்கள் இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தையே பிரச்சாரம் செய்தனர். இஸ்லாம் என்றால் சமாதானம்! இந்த சமாதானத்தின் உடன்படிக்கை குறித்தே தீர்க்கதரிசிகள் உபதேசித்ததாகவும் அந்த சமாதானத்தையே இயேசு போதித்ததாகவும் பைபிள் கூறுகிறது! (பார்க்க: எண் 25:12, ஏசாயா 26:12, 32:17, லூக்கா 1:79, யோவான் 14:27) இயேசுவுக்கு முன்னர் கிறிஸ்தவம் என்ற மதம் இல்லை எனில் அது யாரால் உருவாக்கப்பட்டது? இயேசுவின் கொள்கைக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் எதிரியாக இருந்து கொண்டு அவர்களைத் துன்புறுத்திய பவுல் என்பவர் பின்னாளில் தான் மனம் திரும்பியதாகவும் தனக்கு கடவுளிடமிருந்து செய்தி வந்ததாகவும் கூறி அதனடிப்படையில் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர். (அப்போஸ்தலர் 9: 1-9) கடவுளிடமிருந்து செய்தி வந்தது என்பதும் பவுல் தன்னைப் பற்றித் தரும் சுய அறிக்கை மட்டுமே! அவரது பிரச்சாரங்கள் நியாயப் பிரமாணங்களை மறுக்கும் விதமாகவும் இயேசுவின் நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது! கடவுளுக்காகத் தான் பொய் சொல்வதாகவும், தூய ஆவியால் அவர் தூண்டப்படுகிறார் என்பதற்கு அவரது மனச்சான்று மட்டுமே போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்! (உரோமையர் 3:7, 9:1) பவுல் உருவாக்கிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மதம் பிரச்சாரம் செய்யப்பட்டது! அது பின்னாளில் கிறிஸ்தவம் என்றும் அதைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதே உண்மை! இயேசுவின் பெயராகிய கிறிஸ்து என்ற வார்த்தையுடன் சேர்த்து பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே கிறிஸ்தவம் என்பதை பைபிளின் புதிய ஏற்பாடும் ஒப்புக்கொள்கிறது! அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள். (திருத்தூதர் பணிகள் 11 : 26) ஆதியில் அறியப்படாத ஆதிபாவம்?! இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை ஆதி பாவ சித்தாந்தம் ஆகும். ஆதாம் செய்த பாவம் தலை முறை தலை முறையாக மனித சமுதாயத்தைப் பின் தொடர்கிறது என்றும் அந்த பாவத்தை நீக்கவே கடவுள் இயேசுவாகப் பிறந்து வந்து சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் அதனை நீக்கினார், எனவே இயேசுவின் சிலுவை மரணத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இரட்சிப்பு பெறுவர் என்பது இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கை ஆகும். மனிதனின் நிரந்தர மீட்புக்கு, நித்திய ஜீவனுக்கு வழிவகை செய்வது இயேசுவின் சிலுவை மரணம் என்றால் இது மறைக்கப்பட வேண்டிய ஒரு செய்தி அல்ல. மனித சமூகத்தின் இரட்சிப்புக்கான அடிப்படை மார்க்கம் இதுவென்றால் இதனை இறைவன் மறைத்திருக்க மாட்டான். அப்படியிருக்க இயேசுவின் சிலுவை மரணம் குறித்து பைபிளின் பழய ஏற்பாட்டில் ஒரு செய்தியும் இல்லையே? இறைவன் கூறுவதாக உள்ள உபதேசங்களிலாகட்டும் தீர்க்கதரிசிகளின் மொழிகளாகட்டும், மனித சமூகம் தவிர்ந்திருக்க வேண்டிய தீமைகளைப் பற்றியும் அவர்களின் நடை முறை வாழ்க்கையின் சட்டதிட்டங்களைப் பற்றியும் கூறும் எந்த இடத்திலும் மனித சமூகத்தின் ஈடேற்றத்திற்கான வழி என்று வாதிக்கப்படும் சிலுவை மரணம் குறித்த எந்த குறிப்பும் இல்லை. மாறாக சிலுவை மரணத்திற்கு எது அடிப்படையாகக் கூறப்படுகிறதோ அந்த ஆதிபாவம் என்னும் சித்தாந்தத்துக்கு எதிரான செய்திகளே பைபிளில் பார்க்க முடிகிறது. ஆதிபாவத்தை மறுக்கும் பைபிள்! “பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்” (உபாகமம் : 24:16) “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்” (எசேக்கியேல் 18:20) “பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான், எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்” (எரேமியா 31:29,30) திராட்சைக் காய்களை பிதாக்கள் தின்றால் பிள்ளைகளின் பல் எப்படிக் கூசாதோ அது போன்றுதான் பிதாக்களின் பாவம் பிள்ளைகளைச் சேராது என்று அழகிய உதாரணத்துடன் பைபிளின் பழய ஏற்பாடு விளக்குகிறது. புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம். இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தைப் பற்றி இயேசு எங்காவது கூறியிருக்கிறாரா? இயேசுவின் உபதேசங்களாக பைபிளில் காணக்கிடைக்கும் வசனங்களில் ஆதி பாவத்தைக் குறித்து இயேசு ஒன்றும் கூறவில்லை. அப்படி ஒரு சித்தாந்தத்தையே அவர் அறிந்திருக்கவில்லை என்பதை அவரின் உபதேசங்களும் விளக்கிக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு அவரின் உபதேசங்களாக பைபிள் குறிப்பிடுவதைப் பாருங்கள்: “அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” (மத்தேயு 18: 1-4) இன்னும் (மார்கு 10: 13-16) மனம் திரும்பி பிள்ளைகளைப் போல ஆகிவிடுங்கள் என்பது இயேசுவின் உபதேசம். மனம் திரும்புங்கள் என்றால் பாவங்களிலிருந்து மீண்டு மன்னிப்புக் கோருங்கள், அதன் மூலம் பிள்ளைகளைப் போன்று பாவமற்றவர்களாக ஆகி விடுங்கள் என்பதுதானே பொருள்? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆதாம் செய்த பாவத்தை சுமந்து கொண்டே பிறக்கின்றன என்ற கிறிஸ்தவ சித்தாந்தத்தை இயேசுவின் இந்த உபதேசம் மறுப்பதாக இருக்கிறதல்லவா? பின்னாளில் உருவான கிறிஸ்தவம் என்ற சித்தாந்தத்திற்கும் இயேசுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனபதை இது விளக்கிக் காட்டவில்லையா? சிலுவை மரணம்? இயேசுவின் சிலுவை மரணம் குறித்த நம்பிக்கை நூற்றாண்டுகளாக இருந்து வந்தது எனவும் முஹம்மத் (ஸல்) வந்த பின்னரே அது மறுத்துக் கூறப்பட்டது என்பதாகவும் கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இதில் உண்மையிருக்கிறதா? என்பதையும் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். கிறிஸ்தவ உலகம் முன்வைக்கும் இயேசுவின் வரலாறு அவர் பூமியில் வாழ்ந்திருந்த காலத்தில் எழுதப்பட்டது அல்ல. அவரது காலத்துக்குப் பின்னர் அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் கேள்விப்பட்ட செய்திகளின் அடிப்படையில் சுவிசேஷத்தின் எழுத்தர்களால் எழுதப்பட்ட கோர்வை ஆகும். சிலுவையில் அறையப்பட்டவர் இயேசுவின் தோற்றத்திற்கு ஒப்பாக்கப்பட்டார் என்று குர்ஆன் கூறுகின்றது! சுவிசேஷத்தின் எழுத்தாளர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது உடன் இருக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டவரை இயேசுவாக்கி இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று எழுதியிருக்கலாம் அல்லவா? ஆம்! அப்படி இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களே பைபிளில் காணப்படுகிறது! இயேசுவுக்குப் பின்னர் சுவிசேஷ எழுத்தாளர்களால் எழுதப்பட்ட வரலாற்றில் சிலுவை மரணம் குறித்த பரஸ்பரம் முரண்பட்ட செய்திகளும், இயேசு தேவ தூதர்களால் முன்றாம் வானத்துக்கு உயர்த்தப்பட்டார், அவரைக் காட்டிக் கொடுக்க முற்பட்ட யூதாஸ் அவரின் தோற்றத்துக்கு ஒப்பாக்ககப்பட்டு அவனே பிடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டான் என்ற இயேசுவின் நேரடிச் சீடராக விளங்கிய பர்னபாஸ் என்பவரின் ஏடு தரும் செய்திகளும் இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை, அவருக்கு ஒருவன் ஒப்பாக்கப்பட்டான், அவரை அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக்கொண்டான் என்ற குர்ஆனின் செய்தியை உண்மைப் படுத்துகிறது! அடுத்து, இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை பைபிளின் துணை கொண்டே ஒவ்வொன்றாக ஆராய்வோம். 1. சிலுவை மரணத்திலிருந்து இயேசு அபயம் தேடினார்! “அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்” (யோவான்: 11:53,54) சிலுவை மரணம் பாவமீட்சிக்கான ஒரே வழி என்றிருப்பின், இயேசு அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருப்பார். மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுந்திருக்கமாட்டார். இயேசுவின் இந்த செயல்பாடாக பைபிள் குறிப்பிட்டுக் காட்டும் செய்தி மனிதர்களின் பாவமீட்சிக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்ற சித்தாந்தத்திற்கு முரணாக உள்ளதல்லவா? 2. மரணத்தை விட்டும் தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ள இயேசுவின் கட்டளை “அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன், பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்” (லூக்கா: 22:36) “அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்” (லூக்கா: 22:36) சிலுவை மரணம் பாவமீட்சிக்கான ஒரே வழி என்றிருப்பின் தன்னை கொலை செய்யத் தேடியவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாளை எடுத்து வாருங்கள் என்று இயேசு கூற வேண்டிய அவசியம் இல்லையே? சிலுவை மரணம் பாவமீட்சிக்கான வழியல்ல, அதனை அவர் விரும்பியிருக்கவும் இல்லை என்பதைத்தானே இதுவும் வெளிப்படுத்துகிறது? 3. இயேசுவின் மனமுருகிய வேண்டுதல்! “சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (மத்தேயு 26:38) “அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44) மிகுந்த கவலைப் பட்டு இயேசு இறைவனிடம் வேண்டியதும் அவர் சிலுவை மரணத்தை விரும்பவில்லை என்பதையல்லவா காட்டுகிறது?! அதுவும் முகம் குப்புற விழுந்து என்றால் இஸ்லாமிய வழக்குப்படி சிரம் பணிந்து ஸஜ்தா செய்து இறைவனிடம் வேண்டினார்! சிலுவை மரணம் தான் இரட்சிப்புக்கான வழி என்றால் அத்தகைய மரணம் என்னும் பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு பிரார்த்திக்கவேண்டிய அவசியம் இல்லையே? 4. சிலுவை மரணம் சாபத்திற்குரியது! “மரத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (உபாகமம் 21:23) என்று பைபிள் கூறுகிறது. கடவுளின் மிகுந்த நேசத்துக்குரியவராகிய இயேசு சிலுவையில் தூக்கிக் கொல்லப்பட்டார் என்பது பைபிளின் இந்த கோட்பாட்டுக்கே முரணானதல்லவா? 5. இயேசுவின் வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது! சிலுவை மரணம் என்ற பாத்திரத்தை தன்னை விட்டும் அகற்ற வேண்டும் என்ற இயேசுவின் வேண்டுதலை பைபிள் வசனங்களுடன் விளக்கினோம். இந்த வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது தான் பைபிளிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் செய்தியாகும். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் ஏனென்றால்,கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? (மத்தேயு 7:7-10) தெளிவாக விளங்குகிறதல்லவா? கேட்பவனுக்கு நிச்சயம் கிடைக்கும். அப்பத்தைக் கேட்கும் மகனுக்கு கல்லையும் மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பையும் எவரும் கொடுக்காதது போல தன்னை சிலுவை மரணத்திலிருந்து விடுவிக்கும் படி மனமுருகி வேண்டிய தன் நேசத்துக்குரியவரின் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொள்ளாமலிருந்திருப்பாரா? நிச்சயம் இருந்திருக்கமாட்டார்! நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16) என்ற வசனத்தின் அடிப்படையிலும் நீதிமான் ஆகிய இயேசுவின் வேண்டுதல் ஏற்கப்பட்டிருக்க வேண்டும். நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (யோவான் 11: 21,22) என்ற மார்த்தாளின் கூற்றும் இயேசுவின் பிரார்த்தனை ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே விளக்குகிறது. இன்னும் தெளிவாக அவரின் வேண்டுதல் ஏற்கப்பட்டது என பினவசனம் கூறுவதைப் பாருங்கள் அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7) சிலுவை மரணத்திலிருந்து தன்னை காக்கும்படி இயேசு வேண்டிக் கொண்டார் என்றும் அவரது வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் பைபிள் கூறும் போது அதே பைபிளில் அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற செய்தி யும் இடம்பெறுகிறது! காரணம் வரலாற்றை எழுதிய பிற்கால எழுத்தர்கள் அவரது சரிதையுடன் சிலுவையில் அவர் மரித்தார் என்று அவர்களுக்கு மத்தியில் நிலவியிருந்த ஒரு குழப்பமான கருத்தையும் சேர்த்து எழுதினர் என்றே விளங்க முடிகிறது. சிலுவை மரணம் பற்றிக் கூறுகையில் சுவிசேஷ எழுத்தாளர்கள் தரும் முரண்பட்ட செய்திகள் இதில் குழப்பம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது! 6. சிலுவை மரணம் குறித்த செய்தியில் முரண்பாடுகள்! சிலுவை மரணம் சம்மந்தமாக பல்வேறு எழுத்தர்களின் முரண்பட்ட கூற்றுக்களும் இதைப் பற்றி அவர்கள் யூகத்திலும் சந்தேகத்திலும் உள்ளனர் என்ற குர்ஆனின் கூற்றையே வலுப்படுத்துகிறது. சிலுவையில் அறைவதற்காக இயேசுவை யூதாஸ் முத்தம் செய்து காட்டிக் கொடுத்தான் என்று மத்தேயுவும் லுக்காவும் (மத் 26: 47-50, லூக் 22) கூறும்போது யோவான் அதற்கு மாற்றமாக இயேசு தன்னைத் தானே காட்டிக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (18:3-8) இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்தில் கொண்டு சென்றார்கள் என்று மத்தேயு (26:57) குறிப்பிடும்போது அதந்கு மாறாக யோவான் (18:13) காய்பாவின் மாமனாகிய அன்னா என்பவரிடத்தில் கொண்டு சென்றதாகக் குறிப்பிடுகிறார். குறிப்பாக இயேசுவைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படும் செய்திகளிலும் (மத் 26: 47-50, லூக் 22 – யோவான் (18:3-8) அவரைக் கொண்டு சென்றது யாரிடத்தில் என்பதிலும் (மத்தேயு 26:57, யோவான் 18:13) சிலுவையைச் சுமந்தது யார்? என்பதிலும் (யோவான் 19:17 – மத்தேயு 27:32) இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களைப் பற்றிய செய்தியிலும் (லூக்கா 23:42 – மத்தேயு 27:44) தெளிவான முரண்பாடுகள் காணப்படுகின்றன! இயேசுவின் இறுதிக் கால நிகழ்வுகளைக் குறித்து இயேசுவுக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து சுவிசேஷகர்கள் எழுதி வைத்ததில் பல முரண்பாடுகள் காணும் நிலையில் இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் என்பவரின் சுவிசேஷம் கூறும் செய்திகள் அவர் வானத்துக்கு உயர்த்தப்ட்டார் என்றும் அவருக்கு வேறொருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றும் குறிப்பிடும் குர்ஆனின் செய்தியை முற்றிலும் உண்மைப்படுத்துகிறது! பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்) இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவை பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்கு கட்டளையிட்டார். தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக்கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள். இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்கு பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!” இப்படிக் கூறிக்கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப்ப் போர்த்தியிருந்த யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும் காப்பாற்றப்பட்டார்கள். படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்படவேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!” (The Gospel of Barnabas: Translated by Lonsdale and Laura Ragg, Chapter 215,217) சிலுவை மரணம்? குழப்பத்தை நீக்கிய குர்ஆன்! தன்னுடைய அடியாருக்கு இழிவான சிலுவை மரணம் நிகழக் கூடாது என்பது இறைவனின் நாட்டமாக இருந்தது! எனவே அவரை உயர்த்த நாடினான்! அவருக்கு இன்னொருவன் ஒப்பாக்கப்பட்டான். இந்த உண்மைச் செய்தி இயேசுவின் சீடர்களுக்கு அறிந்திருந்தாலும் பொது மக்கள் இதனை அறியாமல் இருந்தனர். பின்னர் வந்த சுவிசேஷத்தின் எழுத்தர்கள் அவர் சிலுவையில் மரித்துவிட்டதாக எழுதி வைத்தனர். இறைவனைப் பொறுத்த வரை வஹீ என்னும் இறை செய்தி மூலமே இந்த உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறுவது என்பது அவனது நியதி! அதற்காக ஓர் இறைதூதர் வரவேண்டும். இதோ மக்காவில் அகில உலக மக்களுக்கு இறுதி இறைதூதராக அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் இச்செய்தியைச் சொல்லிவிட்டான். 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக அதில் ஒரு எழுத்துக் கூட மாற்றப்படாமல் இன்றும் உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுக்கும் குர்ஆனின் செய்தி இதோ! மேலும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரான மர்யமின் மகன் ‘ஈஸா மஸீஹை‘ கொன்று விட்டோம்‘ என்று அவர்கள் கூறியதாலும் (சபிக்கப்பட்டனர்.) மேலும், அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆயினும், அவர்களுக்கு, அவர் (போன்று ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான். மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுள்ள வனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 157, 158) சுருங்கச் சொன்னால் இயேசுவின் சிலுவை மரணம் என்பது கிறிஸ்தவர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கவில்லை. அவர்களுக்குள் நூற்றாண்டுகளாக நீடித்திருந்த ஒரு குழப்பத்தை குர்ஆன் நீக்கி தெளிவுபடுத்தியது என்பதே உண்மை! தன்னுடைய இறுதித் தூதர் வாயிலாக அருளப்பட்ட இறுதி வேதம் குர்ஆனில் அதைத் தெளிவு படுத்திவிட்டான்! அளவற்ற அருளாளன் ஆகிய அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணை இது! உறுதியான சான்றுகள் வந்த பின்னரும் குழப்பத்தைத் தேடிச் செல்வது தம்மைத் தாமே ஏமாற்றத்தில் ஆழ்த்திக் கொள்வதைத் தவிர வேறில்லை! கிறிஸ்தவ உலகம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
ஆக்கம் : அபூ அப்திர் ரஹ்மான்
இறைவனை நம்பி வாழ்பவரே! ஏகத்துவத்தை உள்ளத்தில் வளர்த்துக் கொள்ளும் காரணங்களை கடைப்பிடி! ஏகத்துவம் என்பது ஒரு மரம் போன்றதாகும் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்படும் போது வளர்ந்து அலங்காரமாகி பலன் தருவது போல் அல்லாஹ்வை நெருங்குவதற்கான செயல் களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் அன்பு, அவனை அஞ்சுவது, அவனிடமே ஆதரவு வைப்பது அதிகமாகிவிடும், அவனையே சார்ந்து வாழ்வது அதிக பலமாகும்.
ஏகத்துவத்தை அதிகரிக்கச் செய்யும் காரியங்களில் சில:
1. அல்லாஹ்விடத்திலுள்ளதைப் பெறும் ஆவலில் அவனுக்குக் கட்டுப்படுவது
2. அல்லாஹ்-வின் தண்டனையை பயந்து பாவங்களை விடுவது
3. வானங்கள், பூமியில் உள்ள ஆட்சியை சிந்தித்தல்
4. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளையும் அவைகள் மூலம் வெளிப்படக் டியவற்றையும் அறிய வேண்டும், அத்துடன் அல்லாஹ்வின் கண்ணியம் ஆற்றலின் மீது அவைகள் அறிவிப்பதையும் அறிய வேண்டும்
5. பயனுள்ள கல்வியையும் அதற்கேற்ப செயல்படுவதையும் கட்டிச் சாதமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
6. குர்ஆனை சிந்தனையுடனும் அதன் பொருளை விளங்கியும் ஓதி வர வேண்டும்.
7. கடமையான தொழுகைக்குப் பின்னர் நபில்-உபரியான வணக்கங்களைக் கொண்டு அல்லாஹ்-வின் நெருக்கத்தைப் பெறவேண்டும்.
8. நாவாலும் உள்ளத்தாலும் தொடராக அல்லாஹ்-வை திக்ர்செய்ய- நினைக்க வேண்டும் 9. விருப்பமான பலர், பல இருக்கும் போது அல்லாஹ்விற்கு யார் பிரியமானவரோ அவரை, எது அல்லாஹ்வுக்குப் பிரியமானதோ அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
10. வெளிப்படையான, மறைமுகமான அல்லாஹ்வின் அருட் கொடைகளில் சிந்தனையை செலுத்த வேண்டும், அடியார்கள் மீது அவன் செய்திருக்கும் பேரருள்கள், உபகாரங்களின் பால் பார்வையை செலுத்த வேண்டும்.
11. அல்லாஹ்-வின் முன் நிற்கும்போதும் அவனிடம் தேவைப்படும் போதும் பயம், பணிவோடு நிற்க வேண்டும்.
12. அல்லாஹ் இறங்கி வரும் நேரமாகிய இரவின் மூன்றில் ஒரு பகுதியில் அல்லாஹ்வுடன் தனித்து இருக்க வேண்டும், அந்த நேரத்தில் குர்ஆன் ஓத வேண்டும், பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீள வேண்டும்.
13. அல்லாஹ்வுக்காக நேசம் கொள்பவர்கள், உளத்தூய்மை. சிறப்பு உடையவர்களுடன் அமரவேண்டும், அவர்களின் பேச்சுகள், குண நலன்களிளிருந்து பயன் பெறவேண்டும்.
14. அல்லாஹ்வுக்கும் உள்ளத்திற்கும் இடையே திரையை ஏற்படுத்தும் காரியங்களை விட்டும் தூரமாக வேண்டும்.
15. அவசியமற்ற பேச்சு, முறையற்ற உணவு, தவறான கலந்துரையாடல், தவறான பார்வை ஆகியவற்றை விட்டு விடவேண்டும்.
16. தனக்கு விருப்பமானதையே தனது முஃமினான சகோதரனுக்கு விரும்ப வேண்டும், அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
17. முஃமின்களுக்கு மோசடி செய்வதை விட்டும் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும், சதி, பொறாமை, பெருமை, ஏமாற்றுவது, தற்பெருமை ஆகியவற்றை விட்டும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
18. அல்லாஹ்-வின் திட்டத்தை முழு மனதுடன் ஏற்க வேண்டும்.
19. அல்லாஹ்-வின் அருட்களுக்கு நன்றி செலுத்தியும் சோதனைகளில் பொறுத்தும் கொள்ளவும் வேண்டும்.
20 பாவங்களைச் செய்யும்போது அவற்றிலிருந்து அல்லாஹ்-வின் பக்கம் மீளவேண்டும்.
21. உபகாரம், நற்குணம், சொந்தபந்தங்களை அரவனைத்தல் இன்னும் இதுபோன்ற நல்ல காரியங்களை அதிகமாகச் செய்து வரவேண்டும்.
22. சிறிய, பெரிய எல்லாக் காரியங்களிலும் நபி (ஸல்) அவர்களை பின் பற்றி வரவேண்டும். 23. அல்லாஹ்வுடைய பாதையில் போராடி வரவேண்டும். 24. தூய உணவை உட்கொள்ள வேண்டும்.
25. நன்மையை ஏவி தீமையை தடுத்து வரவேண்டும்.
ஆக்கம்: K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
பன்றிக் கொழுப்பு.. உஷார்………………..
கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:
அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.
இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது “உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்” என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.
சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?
உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.
இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.
பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.
பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.
இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.
இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.
E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.
பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.
இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்: அனஸ்(ரலி))
இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!
சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.
இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி “சிப்பாய்க் கலகம்” என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.
சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.
தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.
ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.
“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் – 2:135)
நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.
புகழுக்கும் மேன்மைக்கும் உரியவன் அல்லாஹ்! அவனிடம் நாம் மீளுகிறோம். அவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம். ஸலவாத்தும் ஸலாமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக. வல்லமையும் கருணையும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: “இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் பாவ மன்னிப்பின் பக்கமும் சுவனத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள், அதன் அகலம் வானங்கள் மற்றும் பூமியைப் போலுள்ளதாகும். அது பயபக்தியுடையோருக்காக தயார் செய்யப்பட்டிருக்கிறது” (அல்குர்ஆன் – 3:133) பூமியில் சிறிதளவு இடம் வாங்க பல லட்சங்கள் தேவைப் படுகிறது. வானங்கள் மற்றும் பூமி அளவு விசாலம் மிக்க நித்திய பேறான சுவனத்தை அல்லாஹ் நமக்கு இலவசமாகத் தருவதாக வாக்களிக்கின்றான். அதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் பாவங்களை விட்டொழித்து அல்லாஹ்வின் மன்னிப்பின் பால் விரைவதாகும். பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டவர் செல்லுமிடம் சுவனமாகும். அங்கே துன்பப்படுதல் இல்லை, உழைப்பில்லை, களைப்பில்லை, விபத்தில்லை, உயிரிழப்பில்லை, நோயால் பீடிப்பதுமில்லை, தள்ளாத வயதாகி தள்ளாடுவதும் இல்லை, ஏன் மரணமே இல்லை. எங்கும் இன்பம்! எதிலும் இன்பம்! பாலாறுகள், தேனாறுகள், மது ஆறுகள்! அதனை அருந்துவதால் போதை தலைக்கேறி பித்துப் பிடிப்பதில்லை. தலைவலி ஏற்படுவதும் இல்லை! அது இன்பத்தின் நீரூற்று. கண்குளிர்ச்சியளிக்கும் இணைகள்! பணிவிடை செய்ய இளம் சிறார்கள்! மாட மாளிகைகள்! செழிப்பு மிகு தோட்டங்கள்! வர்ணித்தால் தீராத இன்பங்களின் இருப்பிடம். இதோ வல்லமை மிக்க அதன் படைப்பாளன் வர்ணிப்பதே நமக்குப் போதுமானதாகும். “அவர்கள் செய்த நல்லறங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது” (அல்குர்ஆன் – 32:17) அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் அடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனதிலும் தோன்றியிராத இன்பங்களை நான் தயார்செய்து வைத்துள்ளேன்” (புகாரி: 4779,4780 முஸ்லிம் 2824 திர்மிதி 3197) எப்படி பாவமன்னிப்புக் கோருவது? இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறைமார்க்க அற¤ஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவ மீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல் அதனைச் செய¢தது குறித்து வருந்துதல் இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல் உரிமையுடன் தொடர்பான பாவமாக இருந்தால் அதிலிருந்து மன்னிப்புத் தேடுவதற்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. நான்காவதாக அந்த மனிதனின் உரிமையி(னைப் பாதிக்கும் தீங்கி)லிருந்து விடுபடல் வேண்டும். அது பணமாகவோ பொருளாகவோ இருந்தால் அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்திட வேண்டும். அவதூறு சுமத்தியதற்கான தண்டனை போன்றதாக இருந்தால் அந்தத் தண்டனையை ஏற்றிடும் வகையில் அவனிடம் தன்னை ஒப்படைத்திட வேண்டும¢. அல்லது அதனை மன்னித்து விடுமாறு அவனிடம் கோரிட வேண்டும். புறம் பேசிய பாவமாக இருந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு அவனிடம் கேட்க வேண்டும். அனைத்துப் பாவங்களை விட்டும மீட்சி பெறுவது கடமை. ஒரு மனிதன் சில பாவங்களிலிருந்து மட்டும் பாவமீட்சி தேடினால் சத்தியவான்களிடத்தில் அந்தப் பாவத்திலிருந்து மட்டும் தான் மீட்சி தேடியதாக ஆகும். மற்ற பாவங்கள் அப்படியே அவன் மீது படிந்திருக்கும். பாவமீட்சி தேடுவது கடமை என்பதற்கு குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. சமுதாயத்தின் கருத்தொற்றுமையும் அதற்குண்டு. அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நீங்கள் வெற்றி அடையக் கூடும்” (24:31) வேறோரிடத்தில்,“’உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புக் கோரிய பிறகு அவன்பக்கம மீளுங்கள்” (11:3) இன்னோரிடத்தில்,’இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விடம் தூய்மையான பாவமன்னிப்பாக பாவமன்னிப்புக்¢ கோருங்கள்” (66:8) (ரியாளுஸ்ஸாலிஹீன்) அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்று விட்டால் அதுவே சிறந்த பாக்கியமாகும். அதைவிடச் சிறப்பு ஒன்றும் இருக்க முடியாது. அதைப் பெற்றுக் கொள்ள முயல்வோமா?
M.M. அக்பர்
அவர்களின் விதியைப் பற்றிய நம்பிக்கை என்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது)உங்கள் இறைவன் யார்? என்ற கேள்விக்கு முன்னால் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஃபிர்அவ்னுக்கு அளித்த பதிலை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது
“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் அவற்றுக்குரிய (சரியான) வழியை ஏற்படுத்தியிருக்கிறானே, அவனே எங்கள் இறைவன்” என்று கூறினார். (அல்குர்ஆன் 20:20)
ஒவ்வொரு பொருளும் அதற்கே உரிய இயற்கை அமைப்புடன் படைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் அதனதன் தனித்தன்மை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இயற்கை அமைப்பை இஸ்லாம் விதி என்கிறது. அல்லாஹ்வின் இந்த ஏற்பாட்டை எவராலும் மாற்ற இயலாது. மனிதன் உட்பட பிரபஞ்சத்தின் எல்லா படைப்புகளுமே அல்லாஹ்வின் இந்த விதிக்குக் கட்டுப்பட்டதாகும். காட்சியைக் கொடுக்கும் கண் சுவையைக் கொடுப்பதில்லை. நாவு அதைச் செய்கிறது. நறுமணத்தையும் துர் வாடையையும் மூக்குதான பிரித்தறிவிக்கிறது. ஒரு பொருளை நுகர வேண்டுமானால் யாரும் செவியின் பக்கம் அதைக் கொண்டு செல்வதில்லை. தலையில் வளரும் முடிகள் மொட்டையடித்தாலும் வேகமாக நீளமாக வளர்ந்து விடும். புருவம் மற்றும் கண் இமை முடிகள் ஓரளவுக்கு வளர்ந்ததும் நின்று விடும்! அதி நவீன கண்டுபிடிப்புகளின் துணையால் கூட நெருப்பை தண்ணீராக அருந்தவும் முடியாது. தண்ணீரைக் கொண்டு அடுப்பெரிக்கவும் இயலாது. மதியை வெல்லும் அல்லாஹ்வின் விதிகள்!
சூரியன், சந்திரன், பிரம்மாண்டமான நட்சத்திரங்கள், கடல், மலை, காற்று, நெருப்பு, மனிதன், பறவைகள், விலங்கினங்கள், நுண்ணுயிரிகள் என மிகச்சிறியதும், மிகப் பெரியதும் ஆன எல்லாப் படைப்பினங்களுமே அதற்கே உரிய ஒழுங்கான அமைப்பில் படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஒழுங்கமைப்புகள் தாமாகவே உருவானது என்ற நாத்திகர்களின் கொள்கை பகுத்தறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.
ஒவ்வொரு பொருளினதும் செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பதும் அல்லாஹ் ஏற்படுத்திய விதியாகும். அல்லாஹ்வின் இந்த இயற்கை அமைப்பை எந்த மனித கண்டுபிடிப்புகளாலும் மாற்ற இயலாது. “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்பது போன்ற பழமொழிகளின் அடிப்படைக் காரணமும் இதுவே. இறைநம்பிக்கையற்ற காஃபிர்கள் இதை இயற்கை என்று கூறினாலும் மாற்றமின்றி நிலைகொள்ளும் இந்த இயற்கை அமைப்பே அல்லாஹ் வகுத்த விதியாகும். ஆக பொளதீகம் பேசும் காஃபிர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் வல்ல இறைவனின் விதியை அவர்களால் மாற்ற இயலாது. அங்கே தான் படைத்த இறைவனின் ஆச்சர்யம் மிக்க வல்லமைக்கு முன் மனிதனின் சிறுமைத்தனம் வெளிப்படுகிறது!
“அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தான். (மனிதனே!) அர்ரஹ்மானின் படைப்பில் எந்தக் குறையையும் நீ காணமாட்டாய்! எனவே (உன்) பார்வையை மீட்டிப் பார்! (அதில்) ஏதாவது ஒரு பிளவைக் காண்கிறாயா? பின்னரும் இரு முறைகள் உன் பார்வையை மீட்டிப்பார்! உன் பார்வை சிறுமையடைந்த வண்ணம் களைப்புடன் உன்னிடம் திரும்பும்” (அல்குர்ஆன் 67:3,4)
சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் மகத்தான இரண்டு அத்தாட்சிகள்! சந்திரன் பூமியிலிருந்து ஏறத்தாழ 3,60,000 (மூன்று லட்சத்து அறுபதாயிரம்) கி.மீ. தொலைவிலும் சூரியன் பூமியிலிருந்து ஏறத்தாழ 15 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளன என்பது விஞ்ஞானிகளின் கணிப்பீடு! அவை நிர்ணயிக்கப்பட்டுள்ள தொலைவில் இருந்து சற்றேனும் அதிகமாகவோ அல்லது நெருக்கமாகவோ அமைந்திருந்தால் பூமியில் உயிரினமே வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இவ்வளவு கச்சிதமாக அதன் தொலைவை நிர்ணயம் செய்த வல்ல இறைவனின் பேராற்றல் விஞ்ஞானிகளியும் வியப்பில் ஆழ்த்துகிறது! இதோ அந்த பிரம்மாண்டமான நம் கற்பனைக்குள் எட்டாத சூரியன் நொடிக்கு 250 கி.மீ. வேகத்தில் தன் வட்ட வரைக்குள் சுற்றிச் சென்று கொண்டே இருக்கிறது என்பது சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். அல்லாஹ்வின் வல்லமையைப் பறைசாறற்றும் திருமறை வசனத்தைப் பாருங்கள்!
“இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன், அது தன் வரையறைக்குள் சென்று கொண்டிருக்கிறது! இது மிகைப்பவனும், நன்கறிந்தவனுமாகிய(இறை)வனின் ஏற்பாடாகும்” (அல்குர்ஆன் 36:38)
சந்திரன் ஒரு முறை பூமியை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 27 நாட்கள், 7 மணி, 43 நிமிடம், 11.47 நொடிகள் ஆகும் என்பது விஞ்ஞானிகளின் துல்லியமான கணக்காகும். அல்லாஹ்வின் இந்த ஏற்பாடு எவ்வளவு அற்புதமானது!
“சூரியனும், சந்திரனும் (அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட) கணக்கின் படியே உள்ளன” (அல்குர்ஆன் 55:5)
அல்லாஹ்வால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இந்த இயற்கையின் ஒழுங்கமைப்பில் மனிதனுக்கு ஏதேனும் பங்களிப்பு உள்ளதா? நிச்சயமாக இல்லை. பேரண்டத்தின் படைப்பாளனே அதற்குரிய விதியையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆக விதி என்பது மறுக்கவியலாத சான்றுகளின் அடிப்படையில் அமைந்த உண்மையன்றோ!
இப்பேரண்டத்தின் ஒரே உயிர்க்கோளம் பூமி! கோடிக்கணக்கான நட்சத்திரங்களுக்குள் ஒரு சிறிய நட்சத்திரம் மட்டுமே சூரியன் என்பதும் விஞ்ஞானத்தின் நி¬லாபாடாகும். அந்த சூரியனைச் சுற்றிலும் உள்ள கோளங்களில் ஒரு கோளம் பூமி! பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் பிறகாரமே இயங்கிக் கொண்டிருக்கிறது. பூமி சுழல்கிறது. அதனால் இரவு பகல் ஏற்படுகிறது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல 23 மணி 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக் கொள்கிறது என்பதும் விஞ்ஞானத்தின் கணிப்பீடு! அல்லாஹ் ஏற்படுத்திய இந்த அளவில் சிறிதொரு மாற்றத்தையும் கொண்டு வர எவராலும் முடியாது. இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் இணைந்து ஒரு நீர்த்துகள் உருவாகிறது என்ற இறை விதியை எந்த மதி கொண்டும் வெல்ல முடியாது. வல்ல இறைவன் கூறுகின்றான்:
“நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (குறிப்பிட்ட) அளவின்படி படைத்திருக்கிறோம்” (அல்குர்ஆன் 54:49)
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....
படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...
படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...
படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...
படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...
படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...
Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்