Monday, 07-October-2024
இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்…

இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்…
 
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..
 
இன்னும் சில தினங்களில் 2019 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டை நாம் எதிர்கொள்ள இருக்கின்றோம். புது வருடப்பிறப்பு எனக் கூறி இதைக் கொண்டாடி மகிழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட இக்கலாச்சாரம் வேரூண்றியுள்ளது. நம் தமிழகத்திலும் இதன் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பலர் இது பற்றிய மார்க்கத் தெளிவில்லாமல் அவர்களும் இந்த அந்நிய கலாச்சாரத்தை கொண்டாடி வருகின்றனர்.
 
அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் அவன் விரும்பும் காரியங்களை செய்ய வேண்டும். அவன் வெறுக்கின்ற காரியங்களை விட்டு விலக வேண்டும். இந்த ஈமானியச் சிந்தனையை நினைவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
புத்தாண்டுக் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளதா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்கமாக கருதுகிறார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரமே உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மூலக் காரணியாக கிரிஸ்தவர்களின் இணைவைப்புக்கொள்கையே காரணமாக உள்ளது. எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்ப நாம் நடக்கக்கூடாது.
 
حَدَّثَ نَا عُثْمَانُ بْنُ أَبِ شَيْبَة حَدَّثَ نَا أَبُو النَّضْرِ حَدَّثَ نَا عَبْدُ الرَّحَْْنِ بْنُ ثَابِتٍ حَدَّثَ نَا حَسَّانُ بْنُ عَطِيَّة عَنْ أَبِ مُنِيبٍ الُْْرَشِ ي عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّوِ صَلَّى اللَّو عَلَيْوِ وَسَلَّمَ مَنْ تَشَبَّو بِقَوْمٍ فَ هُوَ مِنْ هُمْ رواه أبو داود 3512
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) | நூல் : அபூதாவுத் (3512)
யூதர்களையும் கிரிஸ்தவர்களையும் பின்பற்றுவது குறித்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.
 
حَدَّ ث نََا سَعِيدُ بْنُ أَبِ مَرْيَ حَدَّث نََا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِ سَعِيدٍ رَضِيَ اللَّو عَنْو أَنَّ النَّبَِّ صَلَّى اللَّو عَلَيْوِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَ بْ لَكُمْ شِبْ رًا بِشِبٍْ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّّ لَوْ سَلَكُوا جُحْرَ ضَ ب لَسَلَكْتُمُوه قُ لْنَا يَا رَسُولَ اللَّوِ الْيَ هُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري 3456
அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம் அவர்கள்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம் அவர்கள்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.
புகாரி (3456)
 
இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருடைய பிறந்த நாளுக்கும் எந்த மகத்துவமும் இல்லை. பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை. ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
 
மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.
 
இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.
மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம் அவர்கள்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
 
حَدَّثَ نَا مُوسَى بْنُ إِسَْْعِيلَ حَدَّثَ نَا حََّْادٌ عَنْ حَُْيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّوِ صَلَّى اللَّو عَلَيْوِ وَسَلَّمَ الْمَدِينَة وَلََمُْ يَ وْمَانِ يَ لْعَبُونَ فِيهِمَا فَ قَالَ مَا ىَذَانِ الْيَ وْمَانِ قَالُوا كُنَّا نَ لْعَبُ فِيهِمَا فِ الَْْاىِلِيَّةِ فَ قَالَ رَسُولُ اللَّوِ صَلَّى اللَّو عَلَيْوِ وَسَلَّمَ إِنَّ اللَّو قَدْ أَبْدَلَكُمْ بِِِمَا خَيْ رًا مِنْ هُمَا يَ وْمَ الَْْضْحَى وَيَ وْمَ الْفِطْرِ رواه أبو داود 959
அனஸ் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம் அவர்கள்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம் அவர்கள்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம் அவர்கள்) அவர்கள் “அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்” என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)
 
புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுறுவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அநாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.
 
புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்த ஆகிவிடும்.
எனவே இஸ்லாத்திற்கு முரணான இதுபோன்ற கொண்டாட்டங்களை புறக்கணிப்போமாக…
 
ஆக்கம்: மெளலவி அப்பாஸ் அலி Misc

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions