இஸ்லாம் காட்டித் தந்த திக்ருகளும் அவற்றின் சிறப்புகளும்
இன்றைய பரபரப்பான இயந்திர உலகில் மனிதன் பணமே பிரதானம்,பணத்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நினைக்கிற மனிதனால் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிற நிம்மதியை பெறமுடியாமல் தவிக்கிறான்.அதை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கமுடியாமல் தவிக்கிறான்.அதை அடைவதற்காக இந்நாட்டில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் நம் நாட்டிற்கும் செல்லக்கூடிய காட்சிகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.ஆனால் இவர்கள் எங்கே சென்று நிம்மதியை தேடினாலும் அது அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
இஸ்லாம் மட்டுமே நிம்மதிக்கான அனைத்து வழிகளையும் காட்டியிருக்கிறது.
நம்மைப் படைத்த இறைவனை நினைவுகூர்வதில் தான் மனநிம்மதி கிடைக்கிறது என்பதை திருமறைக்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது
...மேலும் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன,அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க! 13:28
இறைவனை எவ்வாறு நினைவுகூர்வது என்றும் அவற்றின் நன்மை களையும் நாம் முதலில் பார்க்க வேண்டும் அவற்றில் ஒன்று நம்மை நினைத்து நமக்கு அவன் அருள்புரிகிறான்
...ஆகவே நீங்கள் என்னை நினைவு கூருங்கள், நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும் நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள், எனக்கு மாறு செய்யாதீர்கள்.2:152
அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதன் சிறப்பு.
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும்,தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். புகாரி 6407
ஆக இறைவனை நினைவுகூர்பவர் உயிரோடிருப்பவருக்குச் சமம் இறைவனை நினைவு கூறாதவர் பிணத்திற்கு சமம் என்பதை மேற்கூறப்பட்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது
உங்களுடைய அமல்களில் சிறந்ததும் உங்களின் எஜமானனிடத்தில் சிறந்ததும் தங்கம் வெள்ளியை செலவிடுவதை விட சிறந்ததும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்து எதிரிகளின் கழுத்துக்களை நீங்கள் வெட்டி உங்களின் கழுத்துக்களை எதிரிகள் வெட்டுவதையும் விட மிகச்சிறந்த ஒரு காரியத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?என்று நபியவர்கள் தன் தோழர்களிடத்தில் கேட்க அவர்களோ அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்றவுடன் அது தான் அல்லாஹ்வை நினைவுகூர்வதாகும்
Al JAMIYYATHUL FIRTHOSIYA ARABIC COLAGE
jaqh markas Masjithu tawba
JAQH-Tawheed Masjith,Firthousiya Nager
JAQH MARKAZ THIRUMANGALAM MADURAI
masjithussalamath Hawwanager
JAQH MARKAZ ENYAM
jamiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions