அஹ்லுஸ்_சுன்னத்_வல்ஜமாஅத்_வழிமுறையை_பின்பற்றுவோம்
நபி(ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் காலத்திற்குப் பின்னர் சத்திய இஸ்லாத்தின் வழியிலிருந்து தடம் புரண்டு வழிகெட்ட கூட்டத்தினர் பலர் உருவானார்கள். அப்போது நேர்வழி நடக்கும் நன்மக்களை அடையாளப் படுத்துவதற்காக பயன்படுத்தப் பட்ட வாசகம்தான் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்பது.
நபி வழியையும் கூட்டமைப்பையும் உடையவர்கள் என்பது இந்த வாசகத்தின் கருத்து. பிற்காலத்தில் இந்த நல்ல பெயரை தங்களுக்குத் தாங்களே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நல்ல முன்னோர் எந்த சிறந்த கொள்கையையும் நடைமுறையையும் குறிப்பதற்காக இந்த பெயரை பயன்படுத்தினார்கள் என்பதை அறியவில்லை.
அதனால் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைக்கு நேர் எதிரான கொள்கைகளையும் வழிமுறைகளையும் தங்களிடம் வைத்துக் கொண்டு நாங்களும் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். சுன்னத் உண்மையான அஹ்லுஸ் கொள்கை வல் ஜமாஅத்தின் கொண்டவர்களை எதிர்க்கவும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட தவறான புரிதல் கொண்டவர்கள் உண்மையை அறிந்து தங்களின் தவறை திருத்திக் கொண்டு சரியான பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்காக
முற்கால அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களில் இருந்து ஆதாரங்களை இங்கு பதிவு செய்கிறோம்.
அல்லாமா இப்னு ஹஜர் அல் ஹைத்தமி அவர்கள் அஸ்ஸாவாஜிர் அன் இக்திராஃபில் கபாயிர் (பெரும்பாவங்கள் செய்வது பற்றி தமது எச்சரிக்கைகள்) என்ற நூலில் நானூறுக்கும் மேற்பட்ட பெரும் பாவங்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்த நூலில் ஓரிடத்தில் அவர்கள் எழுதியிருப்பது: “தொண்ணூற்று மூன்று முதல் தொண்ணூற்று எட்டு வரையிலான (ஆறு) பெரும் பாவங்
JAQH MARKAZ MARTHANDAM
JAQH Markas Masjithur Rahman
JAQH MARKAZ ENYAM
JAQH MARKAZ MUTHUPET
jaqh markas Masjithu tawba
jaqh markaz ISED Nager
jamiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions