Monday, 22-July-2024
தேசிய பணமாக்கல் திட்டம் – ஒரு அலசல்

இந்திய நிதி அமைச்சர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தியதி National Monetization Pipeline  (தேசிய பணமாக்கல் திட்டம்) திட்டத்தை வெளியிட்டார். இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டிற்கு சொந்தமான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே, விளையாட்டு மைதானங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்று நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு 6 இலட்சம் கோடி ரூபாயை திரட்டுவது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அறிவித்தார்.

இந்த திட்டத்தின் நோக்கம்

பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த தேசிய உட்கட்டமைப்பு திட்டத்தின் மொத்த மதிப்பீடு 100 இலட்சம் கோடி. இந்தியாவில் போதிய உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் தான் சீனா போன்ற நாடுகளுடன் வியாபார ரீதியில் நமக்கு போட்டி போட இயலும். எனவே உட்கட்டமைப்பை உருவாக்குவதற்காக அரசு 100 இலட்சம் கோடி ரூபாயை செலவு செய்யும் என்று மோடி அறிவித்திருந்தார். பிரதமர் அறிவித்த திட்டத்திற்கான முதல்படியாகத்தான் வருகிற நான்கு ஆண்டுகளில் 6 இலட்சம் கோடிக்கான சொத்துக்களை மத்திய அரசு குத்தகைக்கு விட தீர்மானித்திருக்கின்றது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் இந்திய ரெயில்வேக்கு சொந்தமான 400 நிலையங்கள், 90 பயணிகள் ரெயில்கள், மனம் கவரும் மலைப்பாதைகளைக் கொண்ட கொங்கன் ரெயில்வே மற்றும் மலை துறை, விளையாட்டு மைதானங்கள் மற்றும் குடியிருப்பு ஆகியவை இந்த திட்டத்தின் அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். 26700 கி.மீ தூரத்தைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையும் இந்த திட்டத்தின் அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்காக கண்டறியப்பட்டுள்ளது.

ஏன் தேசிய பணமாக்கல் திட்டம் விமர்சிக்கப்படுகின்றது?

திட்டம் புத்தகத்தில் நல்ல திட்டமாக தென்பட்டாலும் இந்தியா முழுவதும்  தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி விட்டன. இந்திய தேசிய காங்கிரஸ் உட்பட பல்வேறு தேசிய கட்சிகள் இந்த திட்டம் நாட்டை  தனியாரிடம் அடமானம் வைக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 70 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த சொத்துக்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 70 ஆண்டுகளாக மக்களின் கடின உழைப்பின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ள சொத்துக்களை தமது கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி செய்கின்றது என்று குற்றம் சாட்டி இருக்கின்றார்.

ஆளும் கட்சி ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் அது விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்ற எதிர்கட்சி அரசியல் மட்டும் தானா இந்த எதிர்ப்புகளின் பின்னணியில் என்பதை நாம் ஆய்வு செய்தாக வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டம் பிரதமர் அறிவித்த 100 இலட்சம் கோடி மதிப்பிலான தேசிய உட்கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதல் படி என்று அரசு கூறுகின்றது. ஒரு நாடு வளர்ச்சியின் அடுத்த படி நிலையை அடைய வேண்டுமென்றால் உட்கட்டமைப்பு (Infrastructure) மிகவும் முக்கியம். உட்கட்டமைப்பு துறையில் பல இலட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகின்றது. சீனா, அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் தமது உட்கட்டமைப்பின் பலன் காரணமாகத்தான் பெரும் வளர்ச்சியை கண்டார்கள் என்பது வரலாறு. ஒரு நாட்டின் வளர்ச்சியில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் இது போன்ற திட்டங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய பணமாக்கல் திட்டத்தில் மூலம் இந்தியாவின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்த இயலுமா என்றால் அது ஒரு கேள்விக்குறியாக நிற்பதைப் பார்க்கிறோம். முன்னாள் நிதியமைச்சர் . சிதம்பரம் உட்பட பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூறாமல் மௌனமாக இருப்பது அரசிடம் தெளிவான ஒரு பார்வை இல்லை என்ற எதிர்கட்சிகளின் கூற்றை பலப்படுத்துவதாக இருக்கின்றது.

முதலாவதாக தேசிய உட்கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த 100 இலட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். பணமதிப்பிழப்பு, முறையாக நடைமுறைப்படுத்தப்படாத ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் கொரோனா தாக்குதல் காரணமாக செயலிழந்து நிற்கும் இந்திய பொருளாதாரத்தை வீரியப்படுத்த இந்த தொகை தேவைப்படுகின்றது. அவ்வாறு செய்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவும், பொருளாதார சுழற்சி ஏற்படவும்  தற்போதைய தேக்க நிலை மாறவும் அதிகம் வாய்ப்பு உண்டு. ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்த குத்தகை மூலம் கிடைக்கும் வருமானம் அரசு மதிப்பின் படி 6 இலட்சம் கோடி தான். யானைப்பசிக்கு சோளப்பொரியை கொடுத்ததைப் போன்று தான் இது ஆகும்  என்பது நாம் உணர வேண்டிய முதல் விஷயம்.

இரண்டாவதாக 6 இலட்சம் கோடி ரூபாயிற்கு விற்பனை செய்யும் துறைகளில் அரசின் முதலீடு எவ்வளவு என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும். இந்த துறைகளின் மூலம் ஈட்டும் இலாபம் எத்தனை கோடி ரூபாய் என்பதையும் அரசு வெளிப்படுத்த வேண்டும். பொருளாதார வல்லுனரும் முன்னாள் நிதியமைச்சருமான . சிதம்பரம், அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துக்கள் குத்தகைக்கு விடப்படவில்லை என்றால் அரசுக்கு கிடைக்கும் இலாபம் என்ன? குத்தகை மூலம் கிடைக்கும் தொகைக்கும் வழக்கமாக அரசுக்கு கிடைக்கும் வருவாயிற்க்குமிடையிலான வித்தியாசம் என்னவென்று அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

மூன்றாவதாக மோடி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்தியாவின் பல்வேறு அரசுக்கு சொந்தாமான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை மோடி அரசு நடைமுறைப் படுத்திய போது இந்த விமான நிலையங்கள் அனைத்தும் மோடியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட அதானி நிறுவனத்திற்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கும் போது இலாபத்தில் செயல்படும் நிறுவனங்களை தமது நெருங்கிய கார்ப்பரேட் நட்புகளுக்கு தாரைவார்க்கும் திட்டத்தின் அடுத்த கட்டம் தான் இது என்ற சந்தேகம் எழுகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் நஷ்டத்தில் செல்லக்கூடிய நிறுவனங்களை மட்டும் தான் நாங்கள் விற்பனை செய்தோம் ஆனால், மோடி அரசு இலாபம் உருவாக்கக் கூடிய நிறுவனங்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்றது என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டுவது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்

நான்காவதாக விற்பனை அல்லது குத்தகைக்காக அடையாளம் காணப்பட்டிருக்கும் சொத்துக்கள் தற்போது 1.30 இலட்சம் கோடி வருவாயை ஈட்டி வருகின்றன. இவற்றை விற்பதன் மூலம் அரசுக்கு 1.50 இலட்சம் கோடி வருவாய் கிடைக்கும். ஆக அரசுக்கு .20 இலட்சம் கோடி ரூபாய் மட்டும் வருவாய் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது. இதன் காரணமாகவே ஆர் எஸ் எஸ்ஸின் தொழிலாளர்கள் ஒன்றியமான பாரதீய மஸ்தூர்

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions