நபி நிந்தனையின் வரலாறு
குளச்சல் நூர்முஹம்மது
கடந்த மாதம் டைம்ஸ்நவ் (TimesNow) நெறியாளர் நவிகா குமாரின் தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நுபுர் சர்மா என்ற பாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பேசியுள்ளார். நுபுர் சர்மாவைத் தொடர்ந்து தில்லி பாஜகவின் ஊடகத்துறை தலைவராக இருந்த நவீன் ஜிண்டலும் இதே கருத்தை சமூக ஊடகமான ட்விட்டரில் பதிய இந்தியாவிலும் உலக நாடுகளிலும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகள் தமது நாட்டிற்கான இந்திய தூதரை வெளியுறவுத்துறை அலுவலகத்தில் அழைத்து தமது கண்டனங்களை அறிவித்துள்ளனர். பல நாடுகளின் இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் கண்டனஙகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்துள்ளனர். இந்த கட்டுரை எழுதப்படும் வெள்ளிக்கிழமையன்று ஹரமில் ஜும்ஆ உரை நிகழ்த்திய ஷேக் அப்துல்லா அல் ஜுஹானி இந்த நிகழ்வை வன்மையாக கண்டித்தது மட்டுமன்றி நபிகள் நாயகத்தை இழிவாகப் பேசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு தங்கள் உயிர்களை விட மேலானவர். ( திருக்குர்ஆன் 33:6). நபிகளார் (ஸல்) இழிவு படுத்தப்படும் போது இந்த சமூகம் தாங்க முடியாமல் தவிப்பதை நாம் பார்க்கிறோம். சமீப காலமாக இத்தகைய செயல்பாடுகள் வலதுசாரி சங்க பரிவார அமைப்புகளால் தொடர்ந்து செய்யப்படுவதையும் நாம் பார்த்து வருகிறோம். வரலாற்றின் பக்கங்களை நாம் ஆய்வு செய்யும் போது நபி
Aliqu justo et labore at eirmod justo sea erat diam dolor diam vero kasd
jammiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions