Monday, 07-October-2024
கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி

கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி

மௌலவி அப்துர் ரஹ்மான் மன்பஈ

அல்கிலாஃபா அல் இஸ்லாமிய்யா என்ற இஸ்லாமிய அரசாட்சி பற்றி பரவலாக பேசப்படுவதை நாம் பார்க்கின்றோம். அதன் சில விவரங்கள் குறித்துப் பார்ப்போம். கிலாஃபா என்பதற்கு பிரதிநிதியாக

இருப்பது என்பது நேரடிப் பொருள். கிலாஃபா என்ற மூலச் சொல்லிலிருந்து உருவான கலீஃபா என்றவார்த்தைக்கு பிரதிநிதி என்பது பொருள்

ஒருவர் செய்ய வேண்டிய பணிகளைப் பொறுப்பேற்று செயல்படுத்தும் இன்னொரு மனிதர் தான் பிரதிநிதி -கலீஃபா என குறிப்பிடப்படுகிறார். எந்தப் பணியை பொறுப்பேற்று செய்தாலும் இவ்வாறு கலீஃபா என்று குறிப்பிடப்படலாம்.

ஆனாலும் முந்தைய ஆட்சியாளர் நடத்திய ஆட்சிக்குப் பொறுப்பேற்று நடத்துபவரை இவ்வாறு குறிப்பிடுவது பரவலான நடைமுறையாக உள்ளது

இந்த விதத்திலேயே அல்லாஹு தஆலா தாவூத் (அலை) அவர்களை கலீஃபா என்று குறிப்பிடுகிறான். அந்த வசனம்: "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில்

கலிஃபாவாக (ஆட்சியதிகாரத்துக்குப் பிரதிநிதியாக) ஆக்கினோம். எனவே மனிதர்களுக்கிடையில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக... (என்று கூறினோம்). (அல் குர்ஆன் 38:26)

இந்த வசனத்தில் அல்லாஹுதஆலா தாவூத் (அலை) அவர்களை கலீஃபாவாக ஆக்கியிருப்பதாக சொல்வதின் கருத்து முன்னர் அல்லாஹ்வின் சட்டத்திட்டங்கள் படி ஆட்சி நடத்தியவர்களின் பிரதிநிதியாக ஆக்கியதைத் தான்.

கலீஃபத்து ரசூலில்லாஹ் :

இதே கருத்தில்தான் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை நபித்தோழர்கள் கலீபத்து ரசூலில்லாஹ் என்று அழைத்தார்கள் இதன் பொருள் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதி என்பதாகும். அதாவது இறைத்தூதர் செய்த ஆட்சியதிகாரத்தை நடத்துவதில் பிரதிநிதி என்பதே இதன் கருத்து!

இந்த கலீஃபா எனும் சொல்

முஸ்லிம் ஆட்சியாளரை குறிப்பிடும் ஒரு பட்டப் பெயராக பயன்படுத்தப்படுகிறது

கிலாஃபா இஸ்லாமிய ஆட்சி : ஆட்சியதிகாரம் முழுமையாக முஸ்லிம்களிடம் இருக்கும் பகுதிகளில் மார்க்கச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

"நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்" என்பது திருக்குர்.ஆனின் கட்டளையாகும். அல் குர்-ஆன் (39:55)

      இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை அமைப்போம் என்று பல நாடுகளிலும் சில இஸ்லாமியர்கள் இயக்கம் நடத்துகிறார்கள்.

இவர்களின் எண்ணம் சரி என்றாலும் வழிமுறை தவறாக இருப்பதாலும் மார்க்கக் கொள்கையில் சரியான தெளிவு இல்லாததாலும் முஸ்லிம்களுக்கு பல விதமான கெடுதல்கள் ஏற்பட காரணமாகி விடுகிறார்கள்.

முஸ்லிம் நாடுகளில் :

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் முஸ்லிம்களே ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையிலுள்ள பல நாடுகளில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. இதற்கெதிராக இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டுமென்று போராடும் இயக்கங்களின் செயல்பாடுகளின் முடிவுகள் பல சமயங்களில் வன்முறைகளாக முடிந்துள்ளன.

ஆட்சியாளர்கள் மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள். என்றால் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு மார்க்கம் சொல்லித் தரும் வழியைத் தான் கடைப்பிடிக்க வேண்டும்! மார்க்கம் சொல்லித்தரும் வழி என்பது ஆட்சித் தலைவர்களுக்கும் நலம் நாடுவது தான்! நபி (ஸல்) அவர்கள், மார்க்கம்

என்பதே நலம் நாடுவது தான் என்று கூறிய போது நபித்தோழர்கள் யாருக்கு நலம் நாடுவது என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்குக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் அவர்களின் பொது மக்களுக்கும்" என்று பதில் கூறினார்கள்,

தலைவர்களுக்கு நலம் நாடுவது என்பது அவர்கள் திருந்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவர்களுக்கு நன்மையை எடுத்துச் சொல்வதும் அவர்களை சரியான பாதையில் நடத்த வேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுமாகும். ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி வேண்டுமென கூறுபவர்களிடம் இது போன்ற நல்ல வழிமுறையைக் காண முடிவதில்லை.

அத்துடன் ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் செயல்பாடுகளை ஒட்டி மக்களுக்கு பாதகம் ஏற்படக் கூடாது. ஆனால் எகிப்து போன்ற நாடுகளில் நடந்த இத்தகைய போராட்டங்களினால் உயிரிழப்புகள்.. பொருள் சேதங்கள் உள்ளிட்ட பல்

சொல்லிக் காட்டுவது

"எங்களின் கடமை (இறைச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதை தவிர வேறில்லை" என்று கூறினார்கள். (அல் குர்ஆன் 36:17) இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் நிலையும் இதுதான். அல்லாஹ் கூறுவது:

உம்முடைய கடமையெல்லாம் எடுத்துச் சொல்வதுதான் கேள்வி கணக்கு எம்மீது இருக்கிறது. (அல்குர்-ஆன் 13:40)

முஸ்லிம் சிறுபான்மை நாடுகள் :

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலேயே இஸ்லாமிய ஆட்சி அமைப்பது பற்றி பேசுவதால் பெருங் குழப்பங்களும் பேரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவ்வாறிருக்கையில் இந்தியா போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மை யாக இருக்கும் நாடுகளில் இவ்வாறு பேசுவது சமுதாயத்துக்கு கூடுதல் தீங்கைத் தேடித் தருவதாகத்தான் அமையும்

 

நபி (ஸல்) அவர்கரின் வாழ்க்கையிலேயே நல்ல முன்மாதிரி உள்ளது. பதிமூன்று வருடங்கள் மக்காவில் இஸ்லாத்தைத் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்த பின்பும் கூட அங்கே இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஆட்சியை நபியவர்கள் அங்கு ஏற்படுத்தவில்லை. காரணம் மிக அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்களாக இருந்தார்கள்.

ஆனால் மதீனாவில் இஸ்லாத்தை ஏற்றவர்களும் ஆதரவாளர்களும் அதிகமாக இருந்ததை வைத்துத் தான் அங்கு இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இஸ்லாமிய ஆட்சியை நபியவர்கள் அமைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதினாவில் ஆட்சித் தலைவராக அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே அங்கிருந்து வெகு தூரப் பிரதேசங்கள்

பலவற்றில் முஸ்லிம்கள்

குறைந்த எண்ணிக்கையில் இருந்து கொண்டிருந்தர்கள் இந்நிலையில் இருந்தவர்களெல்லாம் இஸ்லாமிய அரசு நடைமுறைப்படுத்த கூடிய இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்த இயலாத நிலையிலேயே வாழ்ந்து வந்தார்கள்.

அக்காலத்திலிருந்து இக்காலம் வரை உலகின் பல்வேறு பகுதிகளிலிலே சிறுபான்மை பலவீன நிலையில் கோடிக் கணக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

எதைச் செய்வதற்கு நமக்கு சக்தியில்லையோ அதை செய்யாமலிருப்பது நம்மீது குற்றமாகாது. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை என்பது இறைவாக்கு. (அல் குர்ஆன் 2:286)

மேலும் அல்லஹ் கூறுவது : நீங்கள் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (64:16)

 

இந்த வசனத்தின்படி நாம் இருக்கும் சூழலில் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் மார்க்கச் சட்டதிட்டங்களை செயல்படுத்த முடியுமோ அந்த அளவு செயல்படுத்தினாலே அல்லாஹ் நம்மீது திருப்தி கொள்வான் என்பது தெரிகிறது.

மார்க்கக் கடமைகளில் நாம் செயல்படுத்த முடியும்படியான ஒரு கடமை மக்களை தவ்ஹீத் எனும் ஒரிறைக் கொள்கைகக்கு அழைக்கும் பணியாகும். இவ்வாறு நாம் உளத்தூய்மையுடன் அழைக்கும்போது அல்லாஹ்வின் கிருபையால் மக்கள் ஏற்றுக் கொள்ளும் போது அந்த வல்லவனை மட்டும் வணங்கி வழிபடக் கூடிய அவனது கட்டளைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய சமூகம் உருவாகும்.

          அல்லாஹ் நல்லுதவி செய்வானாக!

அல்ஜன்னத் | 16 | பிப்ரவரி 2023

 

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions