அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 01:10:2024 அன்று வயநாடு நிவாரணப் பணிகளின் முதல்கட்டமாக 21 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவிகள் Jaqh சார்பாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. 01:10:2024 அன்று வயநாடு மேப்பாடி நகரில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இந்த உதவிகள் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியை கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் KNMஅமைப்பின் மாநில துணைத்தலைவர் மௌலவி
ஹுஸைன் மடவூர் தொடங்கி வைத்தார். JAQH Tamilnadu மாநில பொதுச்செயலாளர் குளச்சல் P. நூர்முகம்மது அவர்கள் சிறப்புரையாற்றினார். நலத்திட்ட உதவிகளை மாநில தலைவர் SI அப்துல்காதிர் மதனி தொடங்கி வைத்து உரையாற்றினார். நமது ஜமாஅத்தின் மாநில துணைத்தலைவர் KN முஹம்மது மலங்கு, மாநில பொருளாளர் LM இதாயத்துல்லாஹ், மாநில துணைப்பொதுச்செயலாளர் SA நூருல் அமீன், மற்றும் மாநில செயலாளர் குன்ஹாம்த் கோயா ஆகியோருடன் கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு ஆட்டோ வழங்கப் பட்டது. பேரழிவின் போது கட்டிட தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று பேருக்கு அவர்களுக்கு நஷ்டமான கட்டிட தொழில் உபகரணங்கள் வாங்கி கொடுக்கப் பட்டது. பாதிப்பிற்குள்ளான 3 பேருக்கு கடை தொடங்குவதற்கான பொருளாதார உதவி வழங்கப் பட்டது. மேலும் இந்த பேரிடரின் போது நஷடமான தொழில் உபகரணங்கள் ( பெயிண்டிங், தச்சு உபகரணங்கள், இரு சக்கர பழுது பார்க்கத் தேவைப்படும் உபகரணங்கள், கட்டிட தொழில் உபகரணங்கள் என்று சுமார் 20 பேருக்கு உதவி வழங்கப் பட்டது. மேலும் 3 பேருக்கு லேப்டாப், மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கல்வி கற்க தேவையான IPAD மற்றும் ஸ்டெதஸ்கோப் வழங்கப் பட்டது. ஒருவருக்கு வேலைக்குச் செல்ல இரு சக்கர வாகனம் ஒன்று வழங்கப் பட்டது. இரு பெண்மணிகளுக்கு பசு வாங்கவும் ஒருவருக்கு கறவை இயந்திரம் வாங்கவும் பொருளாதார உதவிகள் செய்யப் பட்டன.
முதல் கட்டத்தில் பாதிக்கப் பட்டவர்கள் வாழ்க்கைக்கு திரும்புவதற்கான முயற்சியாக இந்த நிவாரணங்கள் வழங்கப் பட்டன. அடுத்த கட்ட நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
jaqh markaz ISED Nager
JAQH MARKAZ ERAVIPUTOORKADAI
JAQH-Tawheed Masjith,Firthousiya Nager
JAQH MARKAZ MUTHUPET
JAQH MARKAZ COLACHEL
JAQH HED OFFICE MASJITH SALAM
jamiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions