Monday, 22-July-2024
அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி நாகர்கோவில்

அல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரி நாகர்கோவில்
 
ஓர் அறிமுகம்
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை ரோட்டில் அமைந்துள்ள அல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரி ”ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்’ (JAQH) அமைப்பின் சார்பாக 1987 ஆம் ஆண்டு நாகர்கோவில் கல்லூரிச்சாலையில் உள்ள கலாச்சாரப்பள்ளிவாசலில் துவங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் அந்தப்பள்ளிவாசலில் கல்லூரி சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது.பின்னர் இந்த கல்லூரிக்கென சொந்த கட்டிடம் கோட்டாறு பறக்கை சாலையில் எழுப்பிய பின்னர் 1993 முதல் புதிய கட்டிடத்தில் செயல்பட துவங்கி அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இக்கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 
முஸ்லிம் சமுதாயத்திலிருந்து இக்கல்லூரியை நாடிவரும் அனைத்து இளைஞர்களுக்கும் இஸ்லாமிய அறிவொளி புகட்டி அவர்களை நன்னெறிப்படுத்தி ஓரிறை நம்பிக்கையும் ஒழுக்கக்கட்டுப்பாடும் உள்ளவர்களாக அவர்களை தயார்படுத்தவே இக்கல்லூரி நிறுவப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.
 
பாடதிட்டம்
 
ஐந்தாண்டு பாடதிட்டத்தின் கீழ் கல்வி கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இஸ்லாமிய இளநிலைப் பட்டதாரியாக (Bacherlor of Islamic Studies-B.I.S) சான்றிதழ் பெறத்தகுதியள்ளவராகிறார்.
 
மாணவர் தகுதி
 
ஐந்தாண்டு பாடதிட்டத்தின்கீழ் சேர்ந்து பயில விருப்பமுள்ளவர்கள் பள்ளிப்படிப்பில் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேறியிருப்பதுடன் குர்ஆனை சரளமாக ஓதவும் தெரிந்திருக்கவேண்டும்.
 
இக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்றுள்ளனர்.முறையான ஐந்தாண்டு பாட திட்டத்தின் அடிப்படையில் படித்து தேறி சான்றிதழ் பெற்றவர்கள் எண்பதுக்கும் மேலானவர்கள் உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும், அயல் நாடுகளிலும் அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குர்அன் நபிவழியின் அடிப்படையில் தெரிந்து கொள்கின்றனர்.
 
திருக்குர்ஆன் மனனப்பிரிவு
 
கல்லூரியில் திருக்குர்ஆன் மனப்பாடப்பிரிவு (ஹிஃப்ஸூல் குர்ஆன்) துவங்கப்பட்டு    சிறப்பாக செயல்பட்டு வருகிறது .இதில் பயிலும் மாணவர்கள் ஹாபிழ்களாகவும் காரிகளாகவும் 3 ஆண்டுகளில் உருவாக்கப்படுகிறார்கள்.
 
ஆங்கில மொழி 
 
தாவாக் களத்திற்கு ஆங்கில மொழி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது, ஆங்கில மொழி பேசவும் எழுதவும் கட்டாய பாடமாக நடத்தப்பட்டு வருகிறது.  
 
கணிணிப்பயிற்சி
 
பெருகிவரும் கணிணி தொழில் நுட்பத்திற்கேற்ப மாணவர்களுக்கு விரிவான   முழுமையான கணிணிப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
 
பலகலைப் படிப்பு 
 
பல்கலைக்கழக படிப்பாகிய B.A. படிப்புக்கான பயிற்சி  இங்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து படிக்கலாம்,  தொடர்ந்து முதுகலை படிப்பும் சென்னைப் பல்கலை கழகத்தில் இணைந்து படிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
தர்பியா 
 
அவ்வப்போது திறமையும் அனுபவமும் கொண்ட அறிஞர்களைக்  கொண்டு பல்வேறு முக்கிய பாடங்களில் தர்பியா தரப்படுகிறது. 
 
 மாணவர் விடுதி
 
மூன்று வேளை உணவு காலை மாலை தேநீருடன் உறைவிடமும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சுகாதாரமான சுற்றுச்சூழல், சுத்தமான குடிநீர், 24 மணிநேர  மருத்துவசேவை, விளையாட்டு, உடற்பயிற்சி வசதிகள் போன்றவை மாணவர்களுக்கு சிறப்பான முறையில் செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் கல்லூரி வளளாகத்துக்குள்ளேயே தொழுகைப்பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது.
 
பேச்சுபயிற்சி
 
மாணவர்களிடையே பேச்சுத்திறனை மேம்படுத்த வாரந்தோறும் சொற்பயிற்சி மன்றக்கூட்டங்களும் நடத்தப்படுகின்றன 
 
ஸ்மார்ட் கிளாஸ் 
 
மாணவர்களுக்கு பாடங்கள் எளிமையான முறையில் போதிப்பதற்கு வசதியாக ஸ்மார்ட் கிளாஸ் பயன்படுத்தபடுகிறது. 
 
நிர்வாகம் 
 
இக்கல்லுரி ஜம்யிய்யத்து அஹ்லில் குர்அன் வல்ஹதீஸ்(JAQH) மாநிலத்தலைமையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரிக்கென ஒரு நிர்வாகக்குழு செயல்பட்டு வருகிறது.
 
நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் நன்கொடையை மட்டுமே கொண்டு இந்த நிறுவனம் நடைபெறுவதால் உங்கள் நன்கொடைகள்,சதக்காக்கள் ஆகியவற்றை தந்துதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
 
Al Jamiathul firdousiyya Arabic college
IOB, Elankadai branch
A/C No 272702000000110
Ifsc code IOBA 0002727

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions