JAQH சார்பாக கேரளா வயநாடு நிவாரணம் வழங்கல் இரண்டாவது கட்டம்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரல் மலை மேப்பாடி பகுதிகளில் ஜம்இயத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) சார்பாக இரண்டாவது கட்டமாக 25-11-2024 திங்கள் கிழமை காலை நிவாரண உதவிகள் நேரடியாக சென்று அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பாதிப்பு அடைந்த மக்களுக்கும், குடுபங்களுக்கும் சொந்தமாக தொழில் துவங்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப் பட்டது. இதில் ஆட்டோக்கள், வேன்கள் , ஜெனரேட்டர், தொழில் செய்ய தேவை யான
உபகாரணங்கள், தொழில் நிறுவனங்கள், தையல் மெஷின்கள் ,
லேப்டாப், ஐ பேட், மருத்துவ உபகரணங்கள் , தச்சு தொழில் உபகரணங்கள், கட்டிட வேலைக்கு தேவையான உபகரணங்கள், பிளம்பிங் உபகரணங்கள்,கேமரா,ஆகியவைகள் வழங்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் தனது 11 குடும்பங்களை இழந்து பாதிப்பு அடைந்த நவ்பல் என்ற சகோதரருக்கு ஒரு பேக்கரி , கூல் பார், ஹோட்டல் ஆகியவை அவருக்கு KNM மும் JAQH உம் இணைந்து நிவாரண உதவிகள் வழங்கியது .இந்த நிறுவனங்களை மாநில தலைவர் அப்துல் காதர் மதனி அவர்களும் KNM மாநில தலைவர்TP அப்துல்லாஹ் கோயா மதனி அவர்களும் இணைந்து திறந்து வைத்தார்கள்.
சமீரத் என்ற பெண்மணிக்கு ஒரு டெய்லர் ஷாப்பும், ரெடிமேட் கடையும் மாநில தலைவர் அப்துல் காதர் மதனி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மற்றும் 30 குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவு பொருள்கள் அடங்கிய கிட் மாதம் தோறும் (ஆறு மாத காலம்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை JAQH மாநில பொருளாளர் ஹிதாயத்துல்லாஹ் ராஜா ஹாஜியார் அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
இதில் மாநில பொது செயலாளர் P.நூர் முஹம்மது, துணை பொதுச்செயலாளர் கோவை நூருல் அமீன்,மாநில துணை தலைவர் KN மலங்கு, திருச்சி அல்ஹுதா நிறுவனங்களின் தாளாளர் பேராசிரியர் TC அப்துல் மஜீத் ஆகியோர் கலந்து கொண்டார்கள் . உடன் கேரளா நதுவத்துல் முஜாஹிதீன் (KNM )அமைப்பின் மாநில தலைவர் TP அப்துல்லாஹ் கோயா மதனி, அதன் துணை தலைவர் அஷ்ஷேக் ஹுசைன் மடவூர் அவர்கள் மற்றும் KNM நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் .