குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி,அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், ஜம்யியாவின் சார்பில் JAQH அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது அவர்கள்,
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுல் அன்ஸாரி,
எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக்,
ஐ.என்.டி.ஜே. மாநில தலைவர் S.M.பாக்கர்
கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர்கள் மௌலானா மன்சூர் காஷிபி, பஷீர் அஹமத்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா
சட்டமன்ற உறுப்பினர் நிலோபர்கபில் MLA,
முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் MLA,
மற்றும் கூட்டமைப்பில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

JAQH மாநில ஊடக பிரிவு