குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வரும் ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது தொடராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை..

இன்று அமைதியான முறையில் பேரணி நடத்திக்கொண்டிருந்த ஜாமியா மில்லியா மாணவர்களின் கூட்டத்திற்க்குள் பயங்கரவாதி ராம்பக்த் கோபால் சர்மா என்பவன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மாணவனின் நிலை படுகாயங்களுடன் கவலைக்கிடமாக இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன் பாஜக நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கியால் சுட வேண்டும் என்று கூறிய நிலையில் இன்று இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது ஆளும் அரசு மக்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதற்காக தங்களது தொண்டர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்று இருக்கிறது...

மத்திய அரசு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஜனநாயக அடிப்படையிலான எதிர்ப்பை தங்களின் தொண்டர் படைகளை கொண்டு வன்முறையின் வழியில் ஒடுக்க முயற்ச்சி செய்யாமல் எதிர்ப்பு குரல்களுக்கு செவிசாய்த்து, போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும்

இது போன்ற வன்முறை பேச்சுக்களை பேசுபவர்கள் மீதும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..

இப்படிக்கு

P. நூர்முஹம்மது

JAQH மாநில பொதுச்செயலாளர்