"பசியறிவோம்-உதவிடுவோம்"

JAQH மஸ்ஜிதுல் முபஷ்ஷிர் திருமறைநகர் கிளையில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு ...

கொரோனாவின் கோர தாண்டவத்தால் நாம் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம். எந்த வியாபாரமும், தொழிலும் செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் அன்றாடம் வியாபாரம் செய்பவர்களது நிலை கேள்விக்குறியாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

 இந்த சுழ்நிலையில் நமது திருமறைநகர் மதினாநகர் ரங்காகாலனி ஹூசைன்கார்டன் சங்கமம்நகர் சுவிஸ்கார்டன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தேவை உடைய குடும்பங்களுக்கு

ரூபாய் 1200 மதிப்புடைய அத்தியாவசிய மளிகை பொருட்கள் 🛒அடங்கிய கிட் 85 குடும்பங்களுக்கு நாமே நேரில் சென்று நேற்று மாலை விநியோகம் செய்யப்பட்டது

இன்ஷா அல்லாஹ் மேலும் விடுபட்ட 15 குடும்பங்களுக்கு   இன்று வழங்கப்பட உள்ளது. மொத்தம் நமது பகுதியில் மட்டும் 100கிட் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே

கண்ணியம் காக்கப்பட தகவலுக்காக கூட 📵புகைப்படங்கள் 📹வீடியோ எடுக்கப்படவில்லை என்பதினை பதிவு செய்து கொள்கிறோம்

மேலும் மற்ற, மற்ற பகுதிகளில் இருந்து ஏராளமான குடும்பங்கள் நமது ஜமாஅத்தை நாடி வருகின்றனர்

ஆகையால்  இரன்டாம் கட்டமாக தேவை உடைய அடித்தட்டு மக்களுக்கு ருபாய் 700 மதிப்புடைய 🛒அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய கிட் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது

அல்ஹம்துலில்லாஹ் இது போன்ற காலகட்டங்களில் பொருளாதாரம் கொடுத்து நல்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எங்களின் மஸ்ஜிதுல் முபஷ்ஷிர் JAQH ஜமாத்தின் சார்பாக ஜசாக்கல்லாஹ் ஹைரன் அல்லாஹ் உங்களுக்கு அதிகம் அதிகமாக அருள் புரியட்டும் நமது இந்த அமல்களை ஸாலிஹான நல்லமலாக அல்லாஹ் பொருந்திக் கொள்ளவும் எங்களது பணிகள் தொய்வின்றி தொடரவும் அதிகமாக பிரார்த்தனை செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

 மற்றும் மேலும் பொருளாதாரம் கொடுத்து ஒத்துழைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் இந்த பணியினை செய்திட பொருளாதாரம் மிகப்பெரிய சவாலாக உள்ளது ஆகையால் உங்களால் முடிந்த பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

 

📖 ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார்நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவுஇன்னாருக்கு இவ்வளவுஎன்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள்.

🎓அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) 📖நூல்கள்: புகாரி, முஸ்லிம்

 

 💰GOOGLE PAY / PHONE PAY

 சஃபிக் 9047531736

 📱தொடர்புக்கு

அன்வர்     📞9952447400

ரிஸ்வான் 📞9894354142

 🕌மஸ்ஜிதுல் முபஷ்ஷிர்

JAQH திருமறைநகர் கிளை

கோவை புறநகர்