கோவை மாநகர் மாவட்டம் சார்பில் ஊரடங்கு உத்தரவு துவங்கிய நாள் முதல் (10-05-21) ஏழைகளுக்கும், வழி போக்கர்களுக்கும் "பசியறிவோம்-உதவிடுவோம்" என்ற திட்டத்தை துவங்கி இன்று வரை (01-06-21) தினந்தோறும் குறைந்தது 200 முதல் அதிகபட்சம் 700 நபர்கள் வரை கிட்டத்தட்ட 10,000 நபர்கள் வரை காலை உணவு வழங்கியுள்ளோம் மஸ்ஜித் மாலிக்குல் முல்க் பள்ளி சார்பாக

2) மஸ்ஜிதுஸ் ஸஃபா சார்பாக பத்து நாட்களாக தொலைவில் உள்ள மக்களுக்கு மதிய உணவு தினமும் 300 நபர்கள் வரை வழங்கி வருகிறோம்

 3) மஸ்ஜிதுல் அன்சார்- சாரமேடு கிளை சார்பாக பள்ளிக்கு அருகிலுள்ள தேவையுடைய குடும்பங்களை தேர்வு செய்து 700/_ மதிப்புள்ள மளிகை கிட் கிட்டத்தட்ட 250 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது

4) மஸ்ஜிதுர் ரஹ்மான் அல்-அமீன் காலனி  கிளை சார்பாக கொரோனா தடுப்பு மருந்து (ஓமியோபதி) 500 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது

4) மஸ்ஜிதுல் முஸ்லிமீன் கோட்டை கிளை சார்பாக கோவை மாவட்டத்தின் (மாநகர் மற்றும் புறநகர்) தேவையுடைய உறுப்பினர்களுக்கு ரூபாய் 1000/- மதிப்புள்ள மளிகை கிட் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது

5) மஸ்ஜிதுல் இக்லாஸ் செல்வ புரம் சார்பாக ஒரு வாரமாக மதிய உணவு கிராமங்களில் வழங்கப்படுகிறது, மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மளிகை பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது

6 அனைத்து கிளைகளிலும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது