"பசியறிவோம்-உதவிடுவோம்"எனும் உணவு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக  16.06.2021 நமது JAQH கன்னியாகுமரி மாவட்டம் (கிழக்கு)  சார்பாக   ஏழை எளிய மக்களுக்கு 25 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய ரூபாய் 1500 மதிப்பிலான 150 கிட் மாவட்ட தலைமை அலுவலகம் ஜம்மிய்யா மர்க்கஸில் வைத்து மாலை 4 மணிக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஷெய்ஹ் S.கமாலுத்தீன் மதனி தலைமையில்  JAQH கன்னியாகுமரி (கிழக்கு)  மாவட்டதலைவர் முகம்மது ரஃபீக் ஃபிர்தவ்ஸி, செயலாளர் மாஹீன் அபூபக்கர், பொருளாளர் ஹபீப், துணை தலைவர் கோதர் மைதீன், துணை செயலாளர் ஆஷிக் இக்பால்  அகியோர் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.மற்றும்  மாவட்ட, கிளை  நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.