- Friday, 29-March-2024
திருச்சி மாநகரில் நமது ஜமாஅத்தின் சார்பாக TNPSC GROUP 4 க்கான பயிற்சி மையம் விரைவில்
இன்ஷா அல்லாஹ்....
இன்ஷா அல்லாஹ் திருச்சி மாநகரில் நமது ஜமாஅத்தின் சார்பாக TNPSC GROUP 4 க்கான பயிற்சி மையம் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது.
இஸ்லாமிய சமூகத்தின் இளைஞர்கள் அரசுப்பணிகளில் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர்.
ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சிகள் சிறந்த முறையில் கிடைப்பதில்லை.
தமிழகத்தில் வழங்கபப்ட்டிருக்கும் இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு கூட போட்டியாளர்க்ள் இல்லாத பரிதாபமான நிலை நீடிக்கின்றது
எனவே நமது ஜமாஅத்தின் சார்பில் முதலாவது பயிற்சி முகாம் திருச்சியில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
திறமையான ஆசிரியர்கள்
ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிக்கவனம்
தங்கிப் பயிலும் வாய்ப்பு
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி
ஆகியவை இந்த பயிற்சி முகாமின் சிறப்பம்சங்கள்.
நமது கத்தீப்கள் இன்றைய ஜும்ஆவில் தமிழகம் முழுவதும் இது குறித்த தகவல்களை பகிர்ந்து கிளைகளிலிருந்து ஒவ்வொரு நபர்களை திருச்சிக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
JAQH மாநில பொதுச்செயலாளர்.