கியான்வாபி பள்ளிவாசல் மீதான சங்க்பரிவார அத்துமீறல்...
1991 ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் தொடர்பான சட்டத்திற்கு முரணான நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு...
வன்மையான கண்டனங்கள்..
பாபரி மஸ்ஜிதிற்குப் பின்னர் தற்போது கயவர்களின் காவிப்பார்வை வாரணாசியின் கியான்வாபி பள்ளிவாசலின் மீது பதிந்துள்ளது.
1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் மதவழிபாட்டு தலங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகின்ற நிலையில் சட்டத்திற்கு புறம்பாக ஆய்வு செய்து, முழுமையான ஆய்வு அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே பள்ளிவாசலின் உளு செய்யும் பகுதியில் சிவலிங்கம் கிடைத்திருக்கின்றது என்ற ஆதாரபூர்வமற்ற தகவலை மையப்படுத்தி அந்த பகுதியை சீல் வைத்து உத்தரவு வெளியிட்டிருக்கும் நீதிபதி பட்டவர்த்தனமாக சட்டத்தையும் இயற்கை நீதியின் அனைத்து அடிப்படைகளையும் மீறி இருக்கிறார்.
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு மோடியின் வாரணாசி விஜயத்திற்கு முன்னர் வாரணாசியைச் சார்ந்த சிலர் கியான்வாபி பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு நந்தியை புதைக்க முயற்சி செய்ததை சில பத்திரிக்கைகள் வெளிப்படுத்தியிருந்தன.
பாபரி பள்ளிவாசலில் மேற்கொண்ட அதே திட்டத்தை கியான்வாபி பள்ளிவாசலிலும் நடைமுறைப்படுத்த இந்த கயவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
பாபரி தீர்ப்பு சமூகத்தில் வெறுப்புணர்வை குறைக்கும் என்று ஆதரவளித்த நடுநிலையாளர்கள் தங்கள் நிலைபாடுகளை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசியும் மக்களை தெருவில் இறங்கி போராட்டங்களை நடத்த தூண்டாமல் இருக்க வேண்டுமென்றால் மத உணர்வுகளை எழுப்பி வன்முறையை தூண்டுவது தான் சிறந்த வழி என்ற ஆட்சியாளர்களின் சதித்திட்டம் தெளிவாக புலப்படுகின்றது.
தற்போதைய கியான்வாபி பள்ளிவாசலின் வளாகம் முழுவதும் பள்ளிவாசலுக்குச் சொந்தமானது என்ற 1937 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பையும் 1991 ஆம் இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய மதவழிபாட்டு தலங்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்ற சட்டத்தையும் மீறி கியான்வாபி பள்ளிவாசலின் உளு செய்யும் பகுதியை சீல் செய்து உத்தரவு வெளியிட்டிருக்கும் நீதிபதியின் தீர்ப்பை வன்மையாக கண்டிக்கிறோம்.
மாநில பொதுச்செயலாளர்
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், தமிழ்நாடு