இஸ்லாமிய குடும்பவியல் நிகழச்சியும் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு நிகழச்சியும் மஸ்ஜிதுல் அன்பியாவில் வைத்து 05-06-2022 ஞாயிறு மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. இதில் மௌலவி செய்யித் அலிபைஸி அவர்கள் தலைமை தாங்கினார்கள். மௌலவி முஹம்மது ரஃபீக் ஃபிர்தவ்ஸி அவர்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு என்னும் தலைப்பிலும் மௌலவி ஹாஜாஷேய்ஹ் மிஸ்பாஹி அவர்கள் மக்தப் மதரஸா அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பிலும் மௌலவி காஜாமுஹித்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் வாலிபர்களை வலிமைப்படுத்துவோம் என்ற தலைப்பிலும் மௌலவி ஷாஜஹான் அன்வரி அவர்கள் இனிமையான இல்லற வாழ்க்கை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்களம் பெண்களும் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டு பயன் பெற்றனர்.