கோவை மாவட்டம் உக்கடம் அல்அமீன்காலனி யில் அமைந்துள்ள ரியாளுஸ் ஸாலிஹாத் மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரியில் வைத்து 12-வது பட்டமளிப்பு நிகழ்ச்சி 12-06-2022 ஞாயிறு மாலை 4 மணிக்கு அன்புநகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மாலிக்குல் முல்க் கில் வைத்து நடைபெற்றது. இதில்கல்லூரி முதல்வர் முஹம்மது சப்பீர் ஃபிர்தவ்ஸி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.கல்லூரியின் தாளாளர் சகோ Z.பயஸ் BE அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.கல்லூரியின் செயலாளர் சகோ I.முஹம்மது ஹனீபா அவர்கள் கல்லூரியின் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.மௌலவிD. உமர் அலி ஃபிர்தவ்ஸி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மௌலவி நஸீர் ஃபிர்தவ்ஸி வாழ்த்துரை வழங்கினார்கள். மௌலவி யூஸூப் மிஸ்பாஹி (பன்னூல் ஆசிரியர் ஹதீஸ் நூல்கள் மொழிபெயர்பாளர்) அவர்கள் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி உரை நிகழ்த்தினார்கள். ஆசிரியை ஸஹானா ஸாலிஹிய்யா அவர்கள் நன்றிஉரை நிகழ்த்தினார்கள்.இந்த நிகழச்சியில் மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து பயன் பெற்றனர்.