கடந்த 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தென்காசி நகரில் ஏகத்துவ பிரச்சாரத்தின் மைல் மதரஸத்துல் முஸ்லிமீன் (சிறார்களுக்கான இஸ்லாமிய அரபு பாடசாலையின்) 25வது ஆண்டின் வெள்ளிவிழா நிகழ்ச்சியினை தென்காசி மாவட்ட ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் கிளை - மஸ்ஜிதுத் தவ்ஹீத் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது.  இந்த நிகழ்ச்சியின் முதல் அமர்வு காலை 10 மணி முதல் 4:30 மணி வரை  நடைபெற்றது. இதில் மதரஸத்துல் முஸ்லிமீன் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் ஒரு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.  இதில் 25 வருடங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுயிருந்தது. மேலும் மாணவ மாணவிகள் இஸ்லாமிய கலைப் பொருட்கள் கண்காட்சியும், ஜமாத்தின் நோக்கம் ஜமாத்தின் பணிகள் குறித்து வீடியோ பிரசன்டேஷன் காண்பிக்கபட்டது. கண்காட்சி பகுதியை சுமார் 800 நபர்கள் பார்வையிட்டு சென்றனர்.

 இரண்டாவது அமர்வு மாலை 4:30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இதில் மாவட்ட தலைவர் உஸ்மான் ஃபிர்தவ்ஸி தலைமை தாங்கினார்  ஜமாத்தின் மூத்த அறிஞர்கள் அஷ்ஷைக். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி மற்றும் அஷ்ஷைக். யூசுப் மிஸ்பாஹி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மதரஸத்துல் முஸ்லிமீன் நீண்ட நாட்கள் ஆசிரியர் இருக்கும் அமீர் ஜான் ஃபிர்தவ்ஸி வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.  மாநில பொதுச்செயலாளர் சகோ. நூர் முஹம்மது மற்றும் ஜமாத்தின் நிறுவன தலைவர் அஷ்ஷைக். கமாலூத்தீன் மதனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.  மாவட்ட செயலாளர் சகோ. ஸித்திக் நன்றியுரை வழங்கினார்.

இரண்டாவது அமர்வில் சிறப்பம்சமாக கடந்த காலத்தில் மதரஸத்துல் முஸ்லிமீன் பணியாற்றிய மற்றும் தற்போது பணியில் இருக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் வரவழைத்து கண்ணியப் படுத்தப்பட்டார்கள் மேலும் அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.  இரண்டாவது அமர்வு மாணவ மாணவிகளின் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது. மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் 800 மேற்ப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது அமர்வில் சிறப்பம்சமாக கடந்த காலத்தில் மதரஸத்துல் முஸ்லிமீன் பணியாற்றிய மற்றும் தற்போது பணியில் இருக்கும் 14 ஆசிரிய, ஆசிரியைகள் வரவழைத்து கண்ணியப் படுத்தப்பட்டார்கள் மேலும் அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.  இரண்டாவது அமர்வு மாணவ மாணவிகளின் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது. மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பஷீர் ஃபிர்தவ்ஸி மற்றும் சுலைமான் ஃபிர்தவ்ஸி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்