Monday, 16-September-2024
ஜிஹாத் - ஒரு விளக்கம்_நூர் முஹம்மது குளச்சல்


ஜிஹாத் என்ற வார்த்தையைக் கேட்டால் செவிப்பறையை கிழிக்கும் வெடிகுண்டுகளின் ஓசையும், தகர்ந்து விழக்கூடிய கட்டிடங்களும் அதிலிருந்து உயரும் தூளிப்படலமும்,  உடலிலிருந்து பலமாக உருவப்படும் கூர்மையான கத்தியும் அதிலிருந்து வழிந்தோடும் இரத்தமும், அடுக்கடுக்கான உயிரற்ற சடலங்களும் அங்கிருந்து எழும் ஓலக்குரலும் தான்  மனதில் கற்பனையாக விரியும் என்று கூறுமளவிற்கு நிந்திக்கப்படுகின்ற ஒரு வார்த்தையாக ஜிஹாத் மாறி இருக்கின்றது.

 ஜிஹாத் என்ற பதத்தை பெரும்பாலான ஆங்கிய அகராதிகள்இஸ்லாத்திற்காக மார்க்கக் கடமை என்று எண்ணி தொடுக்கப்படும் புனிதப் போர்என்ற பொருளை வழங்குவதைப் பார்க்கிறோம். ஊடகங்களும் அகராதிகளும் பல்வேறு அரசுகளும் ஆதிக்க சக்திகளுமெல்லாம் ஜிஹாத் என்ற பதத்திற்கு தவறான பொருளை தருகின்றனர் என்றால் இதில் மிகவும் வியப்பிற்குரிய ஒன்று என்பது ஜிஹாத் என்ற பதத்தை மிகவு தவறாக புரிந்து கொண்டவர்களில் முஸ்லிம்களும் இருக்கின்றனர் என்பது தான்.

ஜிஹாத் என்ற வார்த்தை அரபு மொழியின் ஜுஹ்த் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்த வார்த்தையாகும். இதற்கு கடுமையாக முயற்சி செய்தல், விடா முயற்சி என்று பொருள் கொள்ளலாம். போருக்கு ஹர்ப் என்றும் கிதால் என்றும் அரபு மொழியில் கூறுவார்கள். புனிதப் போருக்கு அல் ஹர்பும் முகத்தஸ என்று அரபு மொழியில் கூறலாம். ஆனால் ஜிஹாத் என்ற பதத்திற்கு புனித் போர்  என்ற பொருளை அரபு மொழி நிகண்டுவில் நம்மால் பார்க்க இயலாது. திருக்குர்ஆனில் 41 இடங்களில் ஜிஹாத் அல்லது அதன் வேர்ச்சொல்லின் மாற்றுப் பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் போது ஜிஹாத் என்பது பரந்த பொருள் தரக்கூடிய ஒரு பதம் என்பது புலனாகும்.. அதன் பொருளில் போரும் உட்படுமே தவிர இந்த பதத்தை புனித்ப் போர் என்ற ஒரு விளக்கத்திற்குள் உட்படுத்த இயலாது என்பதை நாம் விளங்க வேண்டும். திருக்குர்ஆனில் போருக்காக அதிகம் பயன் படுத்தப் படும் பதம் கிதால் என்பதாகும்.

திருக்குர்ஆனின் 29 ஆம் அத்தியாயம் 8 ஆவத் வசனம் இவ்வாறு கூறுகின்றது

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்;

இங்கு முஸ்லிமல்லாத பெற்றோர் முஸ்லிமாக இருக்கும் தமது மகனை தங்கள் மதத்திற்கு திரும்புமாறு வறுபுறூத்துவதை அல்லாஹ் ஜிஹாத் என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கலாம்.

பொருளால் செய்யும் ஜிஹாத்

திருக்குர்ஆன் 49:15 வசனம் உடலால் மட்டுமல்லா பொருளாலும் ஜிஹாத் செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகின்றது

நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.

இதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் பெருமழை வெள்ளமோ பேரிடரோ ஏற்பட்டால் தமது தமது செல்வத்தை ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் செலவு செய்து நிவாரணப்பணிகளில் முன்னோடிகளாக இணைகின்றனர். பொருளாதாரத்தை அல்லாஹ்வின் திருப்தியை முன்னோக்கி செலவு செய்வத முஸ்லிம்கள் ஜிஹாதாகக் காண்கின்றனர்.

நபி இப்ராஹீமின் மார்க்கம்

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக ஜிஹாத் வேண்டிய முறைப்படி ஜிஹாத் செய்யுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்;  திருக்குர்ஆன்: 22:78

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்ய வேண்டிய முறைப்படி ஜிஹாத் செய்யுங்கள் என்று அறிவுறுத்தும் இந்த வசனல் இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமின் மார்க்கம் என்று கூறுவதைப் பார்க்கலாம். நபி இப்ராஹீம் வாளேந்தி எந்த போரிலும் ஈடுபடவில்லை. அல்லாஹ்வைப் பற்றிய தவறான நம்பிக்கைகளைக்  கொண்டிருந்த அக்கால சமூகத்திற்கு அல்லாஹ்வின் ஏகத்துவத்தை புரிய வைக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். மேலும் அவ்வாறு ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது சந்தித்த அனைத்து இன்னல்களையும் பொறுத்துக் கொண்டார் என்பதை நம்மால் பார்க்க முடியும்.

குர்ஆனின் மூலம் ஜிஹாத் செய்யுங்கள்

ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக. திருக்குர்ஆன் 22:52

 இங்கு அல்லாஹ் திருக்குர்ஆனின் மூலம் ஜிஹாத் செய்யச் சொல்கிறான். திருக்குர்ஆன் கூர்மையான ஆயுதமல்ல. அதைக் கொண்டு யாருடையவும் உடலை நம்மால் தாக்க இயலாது. ஆனால்

செய்திகள்

View All

வீடியோக்கள்

கட்டுரைகள்

Programme...

View All

Newsletter

Aliqu justo et labore at eirmod justo sea erat diam dolor diam vero kasd

Sit eirmod nonumy kasd eirmod

JAQH

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions